மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவை எதிர்த்த சுயே... மதுரையில் பரபரப்பு.. 12 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் 12 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

    மதுரை: மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட 28 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.

    மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடுவதற்காக 40 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் பரீசிலனை, மாவட்ட தேர்தல் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

    Rejecting of 12 candidates nominations in Madurai: Election official Announcement

    அப்போது, வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் விவரம் மற்றும் ஆவணங்களை சரிபார்த்த பின்னர், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்தார். அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மனுவில் சிறிய பிழைகள் உள்ளதாகவும் ஆனால் வேட்பு மனுவினை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அதற்கு சுயேட்சை வேட்பாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுபோதையில் நடக்கும் குற்றங்கள்.. அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது... நீதிபதிகள் கேள்விமதுபோதையில் நடக்கும் குற்றங்கள்.. அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது... நீதிபதிகள் கேள்வி

    இதில், அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் , அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை, நாம் தமிழர் கட்சி , மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.

    இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 12 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். வேட்புமனுக்களை வரும் 29ஆம் தேதி மதியம் 3 மணி வரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Madurai parliamentary constituency has 28 nominees Include AIADMK, Marxist Communist and AMMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X