ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கு கட்டணம்.. குவிந்த புகார்கள்.. நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தில் ரெய்டு
மதுரை: காமெடி நடிகர் பரோட்டா சூரியின் அம்மன் உணவகத்தில் வணிகவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். புகார்கள் தொடர்பாக விளக்கமளிக்க சூரிக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.
பரோட்டா காமெடி மூலம் மக்களிடையே பரிட்சயமானவர் நடிகர் சூரி. இவருக்கு பரோட்டா சூரி என்ற பெயரும் உள்ளது. தற்போது முன்னணி காமெடியனாக நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்டோருடன் காமெடியில் கலக்கி வருகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு மதுரை அம்மன் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

மதுரை தெப்பக்குளம்
மதுரை தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் உணவகங்கள் உள்ளன. அண்மையில்தான் இந்த ஹோட்டல்கள் தொடங்கப்பட்டன. இங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த ஹோட்டல்களின் தலைமையகம்தான் மதுரை காமராஜர் சால தெப்பக்குளம் அருகே உள்ள அம்மன் உணவகம் ஆகும்.

அம்மன் உணவகம்
இந்த அம்மன் உணவகத்தில் வணிக வரித் துறையினர் நேற்று மாலை சோதனை நடத்தினர். இங்கு வணிகவரித் துறை அதிகாரி செந்தில் தலைமையில் 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை அவர்களள் கைப்பற்றினர். இங்கு ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதன் பேரில் சோதனை நடத்தப்பட்டது.

கொள்முதல்
இந்த சோதனையில் உணவகங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்த உணவு பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லை என தெரியவந்தது. மேலும் ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த புகார்கள் குறித்து 15 நாட்களுக்குள் நடிகர் சூரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வணிக வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சூரி விளக்கம்
இந்த 15 நாட்களுக்குள் சூரி அளிக்கும் விளக்கம் அதிகாரிகளுக்கு திருப்தியாக இல்லாத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரிகிறது. நடிகர் சூரி, அண்மையில் விருமன் படத்தின் விழாவில் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையை பாராட்ட கோயில்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்ததாக பாஜகவினரும் இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications