’அது’ தானே என் வேலையே.. பொடி வைத்து பேசிய சசிகலா! ‘இவர்’ தான் முதல்வர் ஆவார்.. அதகளமான அதிமுக!

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுகவை ஒன்றிணைப்பது தான் தனது முக்கிய வேலை எனவும், கட்சி ஒன்றிணைந்த பின் மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான் முதல்வர் என கூறியுள்ளார் சசிகலா. மேலும், விஜய் கட்சி ஆரம்பிக்க உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் செல்வதற்காக வி.கே.சசிகலா சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

sasikala madurai aiadmk

அப்போது பேசிய அவர்," மதுரையில் கடந்த ஐந்தாறு நாட்களாக அதிக மழை பெய்துள்ளது. நிறைய இடங்களில் தண்ணீர் செல்லவில்லை, தேங்கியுள்ளதை யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை செல்லூர், ஆலங்குளம் கால்வாய் வழியில் தண்ணீர் வந்தாக வேண்டும் அப்படி வந்து பந்தல்குடி கால்வாயில் கலந்து மழைநீர் வடிய வேண்டும்.

ஏன் வடியவில்லை எனக் கேட்டால் இந்த திமுக அரசாங்கம் வந்ததிலிருந்து, எங்குமே தூர் வாரும் முறை செய்யவில்லை. ஆரம்பத்தில் இருந்து நிர்வாகத்தை பிரித்த விதமே தவறு. அம்மா காலத்தில் ஒரு அமைச்சர் ஒரு துறையை பார்த்தபோது சரியாக இருந்தது. தற்போது ஒரு துறையை மூன்று அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுத்தது தான் முக்கிய காரணம். அதை நான் சொன்ன அன்று மாலையே தமிழக அரசு அதை மாற்றி ஒரு அமைச்சருக்கு செல்வது போல் செய்துள்ளார்கள்.

நான்கு வருடம் ஆகிவிட்டது இந்த அரசாங்கம் வந்து. இது மாதிரி தான் இந்த திமுக அரசாங்கம் இன்று நடக்கிறது. அதுமட்டுமில்லாமல் முல்லை, குறிஞ்சி நகர் வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அங்கு யாரும் சென்று பார்க்கவில்லை. அரசாங்கத்திலிருந்து உதவியும் செய்யவில்லை. நிறைய மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது, மரங்கள் சாய்ந்துள்ளது. பண்டிகை காலத்தில் இந்த அளவிற்கு நிலமை மோசமாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள மாசி வீதிகளில் சிறு வியாபாரம் முதல் பெரு வியாபாரம் வரை நடைபெறுகிறது.

அவர்கள் அனைவருமே இந்த தீபாவளிக்கு வியாபாரம் நடைபெற வேண்டும் என எதிர்பார்த்து இருந்த சூழலில் அங்கும் இந்த மழையால் பிரச்சனை ஏற்பட்ட அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. திமுகவை பொருத்த அளவில் கட்சி சார்ந்த நிகழ்வுகளை ஒழுங்காக நடத்துகிறார்கள். அதற்கு உண்டான வேலைகளை மட்டுமே பார்க்கிறார்கள். இதற்காக தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை.

மொத்தத்தில் தமிழக மக்கள் திமுக அரசாங்கப் பிடியில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். நான் செல்லும் இடமெல்லாம் அதை தான் மக்கள் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு விடிவு வரும் 2026 நிச்சயமாக அம்மாவுடைய ஆட்சி வந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். இப்போது நான் வரும்போது கூட ஒரு செய்தி கேள்விப்பட்டேன் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு அரசாங்க இடத்தில் இயங்கி வந்த கிராமத்திற்கு தண்ணீர் வழங்கும் தொட்டியை ஒரு திமுகவை சேர்ந்த நிர்வாகி தனக்கு சொந்தமாக பட்டா போட்டுள்ளார்.

இதை எப்படி அந்த மாவட்ட நிர்வாகம் பார்க்கிறது என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. தமிழக முழுவதும் திமுகவினர் அரசாங்கத்தை நடக்க விடாமல் செய்கிறார்கள். அரசு இடத்தை பட்டா போட்டு எடுத்துக் கொள்கிறார்கள். அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை.

மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் சாலையை தெரியாத அளவிற்கு குளம் போல் உள்ளது. இதற்கு விரைந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு ஒவ்வொரு இடத்திலும் விழா நடத்தி வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படி எடுக்க வேண்டும் என்று அம்மா ஆட்சியில் சரியாக நடைபெற்றது ஆனால் தற்போது அது இல்லை.

மக்கள் பாதிக்கக் கூடாது என அனைத்து இடங்களிலும் நான் சொல்லி வருகிறேன். திமுக அரசாங்கம் இன்னும் ஒரு வருஷம் தான் உள்ளது. அனைத்து மாநகராட்சியிலும் அவர்கள் தான் இருக்கிறார்கள் வேலையே நடைபெறவில்லை. எங்க பார்த்தாலும் குப்பை குலமாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறார்கள் ஆனால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய பாடப்புத்தகம் கொடுக்கவில்லை, போய் சேரவில்லை. காலாண்டு தேர்வு முடிந்துவிட்டது எப்போது குழந்தைகளுக்கு கொடுக்கப் போகிறீர்கள்.

உங்களுடைய வேலை என்னவோ அதை கவனிக்க வேண்டும் அதை விட்டுவிட்டு மக்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் கேட்க வழி இல்லை, ஐந்து ஆண்டுகள் இருந்துதான் ஆக வேண்டும் என நினைத்தால் வரும் 2026 அதற்குண்டான பதில் நிச்சயம் உள்ளது என்பதை சொல்கிறேன்.

போஸ்டர்ககளை அதிமுகவினர் கிழித்தது குறித்த கேள்விக்கு: போஸ்டர் கிழிப்பதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு: யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. புரட்சித் தலைவர் முதலில் திமுகவில் இருந்த போது 6000 கூட்டத்திற்கு மேல் பேசி உள்ளார். அம்மா முதல்வராவதற்கு முன்பு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வேலை செய்துள்ளார். யார் சொன்ன கருத்துக்களாக இருந்தாலும் சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்காது. பல கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கும். சமூக நீதி போன்றதை எடுத்துக்கொண்டோம் அதையெல்லாம் திராவிட தலைவர்கள் செய்துள்ளார்கள். அதனால்தான் பட்டி தொட்டியில் உள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள்.

நாம் யாரையும் தட்டிக் கேட்போம் அதை நமக்கு கொடுத்தது பெரியார், அண்ணா. ஜாதி, மதம் எல்லாம் அவர்கள் பார்த்ததே இல்லை. புரட்சித்தலைவரும், அம்மாவும் 68 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தார். ஒன்பதாவது அட்டவணையிலேயே சேர்த்து விட்டோம். எந்த மாநிலத்திலும் அது நடைமுறையில் இல்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. எங்கு வேண்டும் என்றாலும் சதவிதம் பேசலாம் தமிழகத்தில் மட்டும் பேச முடியாது அந்த அளவிற்கு அதை வகுத்து கொடுத்து சென்றுள்ளார். இதெல்லாம் தான் சமூக நிதி.

கட்சி ஒன்றிணைப்பது குறித்த கேள்விக்கு: நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள். அது எங்களின் வேலை.

அப்போது யார் முதல்வராக இருப்பார் என்ற கேள்விக்கு: மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான். இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது" எனக் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+