இப்படி ஆகிப் போச்சே! ஆடி அமாவாசை வழிபாடு செய்ய முடியாது! சதுரகிரி பக்தர்களுக்கு வெளியான அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்த பக்தர்கள் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. காட்டு தீ அபாயம் காரணமாக சதுரகிரி மலைக்கு செல்ல இரண்டு நாட்களுக்கு தடை மதுரை மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சதுரகிரி மலையில் ஓடுகின்ற ஓடைகளும் அங்கு விளைந்திருக்கும் மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

Sathuragiri Temple Visit Banned

அதுமட்டுமல்லாமல் சதுரகிரி மலையின் மீது ஏறி இறங்கும் போது உடலில் உள்ள வியர்வை வெளியேறி மூலிகை கலந்த காற்றுப்படுவதால் பல நோய்கள் குணமாவதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சித்த மருத்துவர்கள் கூட இங்கிருந்து தான் மூலிகைகளை பறித்துச் செல்கின்றனர்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்

நான்கு திசைகளிலும் நான்கு மலைகள் என மொத்தம் 16 மலைகள் சமமாக சதுர வடிவில் அமைந்திருப்பதால் இந்த மலை சதுரகிரி மலை என பெயர் பெற்றது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை உள்ளிட்ட முக்கிய விரத தினங்கள், சித்ரா பௌர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகியவற்றில் பக்தர்கள் வழிபட அதிக அளவில் திரள்வது வழக்கம். இந்நிலையில், நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்ல திட்டமிட்டுருந்தனர்.

கட்டுப்பாடுகள்

சதுரகிரி மலை மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் பக்தர்கள் வழிபாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. மேலும் வனவிலங்கு மற்றும் காட்டாற்று வெள்ள அபாயம் காரணமாக வனத்துறையினர் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே பக்தர்களை மலைக்கு செல்ல அனுமதிக்கின்றனர்.

அனுமதி மறுப்பு

இந்நிலையில், சதுரகிரி மலைக்கு செல்ல இரண்டு நாட்களுக்கு தடை மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்ம்," மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் அமைந்துள்ள சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் நேற்று (10.08.2026) ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, இன்று (11.08.2026) பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

காட்டுத்தீ

இதனைத் தொடர்ந்து, காட்டுத்தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக வனத்துறையினரிடம் இருந்து தகவல் கிடைத்ததையடுத்து, நாளை (12.08.2026) பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என இன்று (11.08.2026) மதியம் பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், இன்று (11.08.2026) மாலை சுமார் 7.00 மணியளவில், காட்டுத்தீ மீண்டும் பரவியுள்ளதாக மதுரை மாவட்ட கண்காணிப்பாளரிடமிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு தடை

தீயை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், நிலைமையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நாளை (12.08.2026) சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். மேலும், காட்டுத்தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்து, இயல்பு நிலை திரும்பிய பிறகு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்குவது குறித்து தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்" என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+