1 கிலோ கடல் மீன் 1 ரூபாய்க்கு.. முதலில் வரும் 100 பேருக்கு மட்டும்.. மதுரையில் சூப்பர் ஆஃபர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் 1 ரூபாய்க்கு 1 கிலோ கடல் மீன் விற்பனை செய்யப்படுவதால் அங்கு மீன்களின் விற்பனை களைகட்டி வருகிறது.

Recommended Video

    1 கிலோ கடல் மீன் 1 ரூபாய்க்கு.. முதலில் வரும் 100 பேருக்கு மட்டும்.. மதுரையில் சூப்பர் ஆஃபர்

    மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைந்துள்ளது மன்னார் வளைகுடா மீன்கள் விற்பனையகம். இங்கு மீன்கள் கடலில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த மீன்கள் விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உரிமையாளரும் வழக்கறிஞருமான திருமுருகன் புதுயுக்தியை எடுத்துள்ளார்.

    முதலில் வரும் 100 வாடிக்கையாளர்கள்

    முதலில் வரும் 100 வாடிக்கையாளர்கள்

    அதாவது இன்று ஒரு நாள் மட்டும் முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ எந்த வகையான மீன்கள் வாங்கினாலும் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி காலையில் திறக்கப்பட்ட மீன் கடையில் சுற்றுப்புற பகுதியில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் குவிந்தனர்.

    வழக்கறிஞர்

    வழக்கறிஞர்

    உரிமையாளரும் வழக்கறிஞருமான திருமுருகன் தலைமையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கிட்டு குத்துவிளக்கேற்றி மீன் கடை விற்பனையை திறந்து வைத்தார். மதுரை மக்களுக்கு இன்று நல்ல வேட்டைதான் போல!

    மாஸ்க் அணிந்தது

    மாஸ்க் அணிந்தது

    இந்த கடைக்கு வந்தவர்களில் சிலர் மாஸ்க் அணிந்தும், சிலர் அணிந்தும் அணியாதது போலும் இருந்தனர். அது போல் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. ரூ 1 க்கு மீன்கள் விற்கப்பட்டதால் காலையிலேயே கூட்டம் அலைமோதியது. நிறைய பேர் நிறைய மீன்களை கிலோ ரூ. 1 க்கு வாங்கிச் சென்றனர்.

    கொரோனா

    கொரோனா

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டு கிடந்தன. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் மீன் கடைகள், இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இங்கு சமூக இடைவெளி இல்லாமலும் மாஸ்க் அணியாமலும் கூட்டம் கூடியதை அடுத்து போலீஸார் அவர்களை எச்சரித்து கலைத்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+