மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு!
Recommended Video
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததன் எதிரொலியாக அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கோவிலுக்கு வருகின்றனர். இதன் காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு எப்போதும் பலப்படுத்தப்பட்டே இருக்கும்.

கோவிலின் நான்கு கோபுர வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாகவே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் போலீசாரும் சோதனை செய்த பின்னர்தான் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள்.
இந்த நிலையில் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் துணை ஆணையாளர் கார்த்திக் ஆகியோரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் தலைமையில் போலீசார் கோவிலின் நான்கு கோபுர வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.
இதனால் பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. கோவிலில் ஆடி வீதிகளும் இந்த சோதனை நீடித்தது. இதுபற்றி விசாரித்தபோது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்ததால் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டதாக தகவல் வெளியானது.
மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் 110 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூடுதலாக 370 போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மோப்பநாய் மூலமும் சோதனை நடந்து வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாகவே மீனாட்சி அம்மன் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அனைத்து பகுதிகளிலும் போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று கோவில் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications