நடிகர் என்பதால் வீச்சும், ரீச்சும் அதிகம்! ஆனா எங்களுக்கு அப்படியல்ல.. விஜய் மாநாடு குறித்து சீமான்

Subscribe to Oneindia Tamil

மதுரை: விஜய் நடிகர் என்பதால் அவருடைய மாநாட்டுக்கு வீச்சும், ரீச்சும் அதிகமாக இருக்கிறது என்றும், ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு அரசியலுக்கு நடிகர்களின் என்ட்ரி என்பது புதியதல்ல. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யும் அரசியலில் இணைந்திருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் எனும் அவரது அரசியல் கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநாடு குறித்து பேசியிருக்கிறார். விஜய் நடிகர் என்பதால் அவர் மாநாட்டுக்கு வீச்சும், ரீச்சும் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு பேசியுள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது, “திரைப்புகழில் இருக்கும் போது வீச்சும், ரீச்சும் அதிகமாக இருக்கும். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. கடைசிவரை தமிழர்களாகிய நாங்கள் ஆதரவற்றே இருக்க வேண்டியுள்ளது. நடிகர் விஜய்யின் மாநாடு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

மேடைகளில் அரசியலும், இலக்கியமும் பேசப்பட்டது அண்ணா வந்த பிறகுதான். எனவே, இது குறித்து அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் நீண்ட காலமாக உழைத்து அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவர் எதிர் பாராத விதமாக உயிரிழந்துவிட்டார். அவர் இருந்திருந்தால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளார். முன்னதாக விஜய் மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்களின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. இதில், அண்ணாவும், பிரபாகரனும் மிஸ்ஸிங்.

அண்ணா கட் அவுட் வைக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதன் மூலம், திமுக, அதிமுக வழியில் விஜய் போகவில்லை என்பது தெளிவுப்பட தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல விஜய் தமிழ் தேசிய அரசியல் பக்கம் வருவார் என்று நாதக தம்பிக்கள் பரவலாக பேசியிருந்தனர். ஆனால், பிரபாகரன் கட்அவுட்டும் மிஸ் ஆகிவிட்டது. இதனால் சீமானை சோஷியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்ய தொடங்கினர். இதற்கும் சீமான் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்திருக்கிறார்.

அதாவது, “நான் பிரபாகரனை வைத்திருக்கிறேன் என்பதால், விஜய் அதை வைக்காமல் இருந்திருக்கலாம். அதேநேரம் வேலுநாச்சியார், அம்பேத்கருக்கு கட் அவுட் வைப்பதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது. அவர்கள் யார் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம்” என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+