தவெகவுக்கு தான் எங்க ஓட்டு.. மேடையை நோக்கி வந்த குரல்.. சிரித்துக் கொண்டே சீமான் கொடுத்த பதில்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமே எங்கள் வாக்கு என்று சீமான் மேடையை நோக்கி ஒரு குரல் வந்த நிலையில், அதற்கு சீமான் சட்டென ஒரு பதில் கொடுத்துள்ளார். நடிகனை நேசிப்பவன் நமக்கான ஆள் அல்ல என்று கூறிய சீமான், நாட்டை நேசிப்பவனே நமக்கான ஆள் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய போது முதல் அரசியல் தலைவராக ஆதரவு தெரிவித்தவர் சீமான். ஆனால் கொள்கைத் தலைவராக பெரியாரை கூறியதால், விஜய்யை கடுமையாக சாடினார். ஒரு கட்டத்தில் சீமான் vs விஜய் என்று சூழல் மாறத் தொடங்கியது. ஆனால் இதுநாள் வரை விஜய் வாயில் இருந்து நாதக-வை பற்றியோ, சீமானை பற்றியோ ஒரு வார்த்தை கூட வரவில்லை.

Seeman vs Vijay

ஆனால் சோசியல் மீடியாவில் நாம் தமிழர் கட்சிக்கும், தவெகவினருக்கும் ஒரு மோதல் நடந்து கொண்டே இருக்கிறது. இதனிடையே நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை விஜய் அதிகளவில் கைப்பற்றப் போவதாக கணிப்புகள் வெளியாகின. இதனையறிந்த சீமான் நேரடியாகவே விஜய்யை அட்டாக் செய்ய தொடங்கினர். நாதக நிர்வாகிகளும் கரூர் விவகாரத்தில் விஜய்யை சாடி வந்தனர்.

இந்த நிலையில் மதுரையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் சீமான் கலந்து கொண்டார். அப்போது நாதக ஆதரவாளர் ஒருவர் சீமானிடம், மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன வேலை வாய்ப்பு அளிக்கப்படும்? அதேபோல் நாதக தொடங்கப்பட்டு 16 ஆண்டுகளாகிவிட்டது.. என்ன செய்திருக்கிறார்கள்.. தவெகவுக்கு தான் எங்கள் ஓட்டு என்று பலரும் கூறுகிறார்கள்.

அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சீமான், அப்படி சொல்பவர்களுக்கு பார்வை இல்லை என்றுதான் சொல்ல முடியும். நடிகனை நேசிக்கிறவன் நமக்கான ஆள் அல்ல.. நாட்டை நேசிக்கிறவனே நமக்கான ஆள்.. மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு என்ன வேலை கொடுப்பீர்கள் என்று கேட்டது சரியானது.

அவர்களுக்கு நாதக ஆட்சி அமைந்ததும் அரசுப் பணியில் முக்கியத்துவம் அளிக்கப்படும். நகருக்குள் மட்டும் சிற்றுந்து, நெடுந்தூர பயணத்திற்கு மட்டுமே பேருந்து வசதி அளிக்கப்படும். பேருந்துக்குள் ஓட்டுநர் மட்டுமே இருப்பார்.. நடத்துநர் பேருந்து நிலையத்தில் இருந்தே டிக்கெட் கொடுப்பார். புதிதாக வேலைக்கு எடுக்கப்படும் நடத்துநர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கைம்பெண்களாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+