மறுபடியும் நடிக்கப் போயிருங்க கமல்.. அதுதான் உங்களுக்குச் சரிப்பட்டு வரும்.. செல்லூர் ராஜு அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கமலுக்கு அட்வைஸ் கொடுத்த செல்லூர் ராஜு-வீடியோ

    மதுரை: கமலஹாசன் தன் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் என்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார்.

    திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் வேட்பாளர் முனியாண்டி ஆதரித்து தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

    Sellur Raju advises Kamal Haasan to go back to acting

    கமலஹாசனுக்கு அரசியலின் அரிச்சுவடியே தெரியாது. அவர் சினிமாவில் பட்டம் பெற்று இருக்கலாம். சினிமா துறையிலும் கலைத்துறையிலும் பல்வேறு விருதுகளை பெற்று இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. அவருக்கு அரசியல் ஒத்து வராது. கமலஹாசன் ஒரு நல்ல கலைஞன்.

    தமிழகத்தில் கமலஹாசன் அரசியலுக்கு வந்ததிலிருந்து அவர் பேசியது யாருக்கும் எதுவும் புரியவில்லை. இப்போது இந்துக்கள் குறித்து அவர் பேசிய கருத்திலிருந்து அரசியலில் மிகப் பெரிய எதிர்ப்பை சம்பாதித்து விட்டார். ஆகவே கமலஹாசன் அவரின் கட்சியை கலைத்து விட்டு செல்லலாம்.

    கமல் மீண்டும் கலைத்துறையில் ஈடுபட வேண்டும் என்பதே எனது எண்ணம். ஸ்டாலின் தன்னை அகில இந்திய தலைவராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நிலையான கருத்து கிடையாது. உண்மையான காங்கிரஸ் தியாகிகள் யாரும் திமுகவிற்கும் ஓட்டு போட மாட்டார்கள்.

    துண்டை விரித்து பார்க்கிறார் ஸ்டாலின். ஏதாவது அமையுமா என்று. பிஜேபி தமிழிசை சௌந்தராஜன் கூட சொல்லுகிறார் பிஜேபி தலைவர்களுடனும் தி மு க ஸ்டாலின் பேசி வருகிறார் என்று. பொதுமக்கள் இந்த தேர்தலில் அவருக்கு சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை

    அரசியல் பதவிக்கு தகுதி இல்லாத தலைவராக இருக்கிறார் ஸ்டாலின். எப்படியோ இருந்த திமுக இப்போது எப்படி மாறி விட்டது என்பதை பாருங்கள். ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அதிமுகவை பொறுத்தவரை அண்ணா வழியிலும் ஜெயலலிதா வழியிலும் எம்ஜிஆர் வழியிலும் நடக்கக் கூடிய ஒன்று என்றார் ராஜு.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+