"No Bad Words".. தவெகவினரை சல்லி சல்லியாக நொறுக்கிய செல்லூர் ராஜு.. எங்களைப் பேச தகுதியே இல்லை
சென்னை: ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுகவைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா என்ன பேசினாலும் கதைக்கு ஆகப் போவதில்லை என்றும், விஜய்யை முதல்வராக்குவது நிச்சயம் என செங்கோட்டையன் கூறியது தொடர்பாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு. பொதுச் செயலாளர் எடப்பாடியும் அதனை சொல்லிவிட்டார். செல்லாத நோட்டு ஆயிரம் பேசும் என்ன செய்வது, அதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை. அதைப் பற்றி பேச வேண்டாம்.

செங்கோட்டையனை ஏற்காத தவெகவினர்
செங்கோட்டையன் ஒரு காலத்தில் எங்களுடன் இருந்தவர்கள். அவரைப் பற்றிப் பேசுவது எங்களைப் பற்றி பேசுவது போன்று. அவருக்கு அது தெரியவில்லை. தவெகவுக்குச் சென்ற பின்னரும் செங்கோட்டையன் சும்மா இருப்பதில்லை. அவரை தவெகவினரே ஏற்றுக் கொள்ளவில்லை. நீ கிழவன் பேசாமல் இரு என தள்ளிவிடுகின்றனர்.
ஆதவ் அர்ஜுனா தூய்மையின் பிறப்பிடம். நாட்டுக்காகவும், தியாகம் புரிந்த குடும்பத்தில் இருந்து பிறந்து வந்தவர் அவர் பேச வேண்டியதுதான். நாட்டில் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சு அட்டையைப் போல வளர்ந்த குடும்பம் அவருடைய குடும்பம். இதற்காகத்தான் ஜெயலலிதா தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டையே ஒழித்தார். ஆனால், அந்தக் குடும்பம் தான் பல மாநிலங்களில் லாட்டரி சீட்டை நடத்தி வருகின்றனர்.
ஆதவ் அர்ஜுனா மீது விமர்சனம்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சு வலம் வந்து கொண்டிருக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுகவைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா என்ன பேசினாலும் கதைக்கு ஆகப் போவதில்லை. நாளைக்கு என்னாகும் என்பதை இப்போதே கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. எந்த மக்களைப் போய் தவெக தலைவர் சந்தித்தார். ஆதவ் அர்ஜுனா எத்தனை மக்களை சந்தித்தார். மக்களுடைய நிலையைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்.
சும்மா ஊடகத்தில் பேசுகின்றனர். அதனை ஊடகங்களும் கேள்வி கேட்கின்றனர். ட்விட்டரில் போடுகின்றனர். இதுதான் அரசியலா. விஜயை ரசிகர்கள் ரசிப்பார்கள். தவிர மக்கள் ரசிப்பார்களா. மக்களுக்காக என்ன போராட்டத்தை செய்திருக்கிறார்கள். நேற்றைய தினம் இளைஞர்கள் வாழ்வை இந்த அரசாங்கம் சிதைத்திருக்கிறார்கள்.
விஜய் முதல்வராவார்
கருணாநிதி ஜெயலலிதா போல திமுக - அதிமுக இடையே தான் போட்டி. இதுவரை வரலாற்றிலேயே டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்ததாக வரலாறே இல்லை. அந்த வரலாற்றை ஸ்டாலின் மாற்றி எழுதிவிட்டார். இதை அவர்களால் கேட்க முடியுமா என்றார். மேலும், விஜய்யை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்குவார். கல்லூரிக்கு வேண்டுமானால் விஜய் முதல்வராகலாம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications