மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செல்லூர் ராஜூவிடம் இருந்து வந்த "அந்த விஷயம்".. சபாஷ் போட்ட இபிஎஸ் டீம்.. ஓபிஎஸ் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தையை கேட்டதும் ஓ பன்னீர் செல்வத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விளாங்குடி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களையும் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே அதிமுக எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. கட்சிக்குள் ஒரு தலைவர் நிர்வாகியை நீக்குவது என்பதெல்லாம் சாதாரணம்தான். அது போலத்தான் கருணாநிதி எம்ஜிஆரை நீக்கியிருந்தார்.

நாயரையும், பிராமணப் பெண்ணையும் தலைவராக ஏற்ற கட்சி அதிமுக -செல்லூர் ராஜூ நாயரையும், பிராமணப் பெண்ணையும் தலைவராக ஏற்ற கட்சி அதிமுக -செல்லூர் ராஜூ

 திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கம்

திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கம்

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆருக்கு பொதுமக்கள் அமோக ஆதரவை கொடுத்தார்கள். அதிமுக மற்றவர்கள் நினைப்பது போல் சாதாரண இயக்கம் அல்ல. இது திராவிட பூமி. தந்தை பெரியாரின் திராவிட உணர்வு நிறைந்த மண். மாற்று சக்தி வரக் கூடாது என நினைத்த பெரியாரின் சீர்திருத்த கொள்ளைகளை அதிமுக கடைப்பிடிக்கிறது.

 எம்ஜிஆர் உயில்

எம்ஜிஆர் உயில்

1984, 86 கால கட்டங்களில் யாருக்கு 80 சதவீதம் தொண்டர்களின் ஆதரவு இருக்கிறதோ அவருக்கே அதிமுக என எம்ஜிஆர் உயில் எழுதி வைத்திருந்தார். அதிமுக எப்போது வீழாது. புத்தெழுச்சியுடன் மீண்டும் மீண்டும் எழும். அதிமுக தொண்டர்களை தேசிய கட்சிக்கு பிரித்து செல்ல நடக்கும் முயற்சி நிறைவேறாது.

 அதிமுக தொண்டர்கள்

அதிமுக தொண்டர்கள்

அதிமுக தொண்டர்கள் ஜாதி, மத, இனம் சொல்லி பேசுபவர்களுக்கு இடம் தராதீர்கள். நாயர், பிராமண பெண் ஆகியோர் தலைமையில் இயங்கிய இயக்கம். நாம் அனைவரும் மதசார்பின்மையை பின்பற்றி வருகிறோம் என்றார் செல்லூர் ராஜூ. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிய பேச்சில் ஒரு சில விஷயத்தை கேட்டு ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    அதிமுகவில் சதி வலை பின்னியவர்கள் யார்னு தெரியும்- OPS பரபரப்பு பேச்சு *Politics
     ஓபிஎஸ் ஷாக்

    ஓபிஎஸ் ஷாக்

    அதாவது அதிமுக தொண்டர்களை தேசிய கட்சிக்கோ மாநில கட்சிக்கோ மடைமாற்ற முடியாது என செல்லூர் ராஜூ மறைமுகமாக விமர்சித்தது ஓபிஎஸ்ஸைதான் என்கிறார்கள். அண்மைக்காலமாக ஓபிஎஸ் பாஜகவில் இணைய போகிறார், அவர் திமுக ஆதரவாளர் , திமுகவின் பி டீம் என்றெல்லாம் பேசப்பட்டு வரும் நிலையில் செல்லூர் ராஜூவின் கருத்து ஓபிஎஸ்ஸுக்கே ஷாக்கை கொடுத்துள்ளதாம். அதே வேளையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனராம்.

    English summary
    Ex Minister Sellur Raju indirectly criticises OPS that he is going to join in BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X