அது தவெக இல்ல.. தமிழக பாலியல் வெறி கழகம்.. ஆட்சியருக்கே நூல் விடறாங்க.. செல்லூர் ராஜூ செம கலாய்
மதுரை: கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக வெற்றிக்கு பெண் வாக்காளர்கள் முக்கிய காரணம். பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் சிங்க பெண் படை ஆரம்பித்தார். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தவெக நிர்வாகிகள் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். தவெக தமிழக பாலியல் வெறி கழகமாக மாறியுள்ளது. மாவட்ட ஆட்சியருக்கே தவெக எம்எல்ஏ நூல் விட்டுள்ளார் என செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பார்த்தாலும் பார்த்தேன். உனை போல பார்க்கலை என ஒரு பழைய பாட்டு இருக்கிறது. அது மாதிரி, தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலேயே கேள்விப்படாத உம்மணாமூஞ்சி முதலமைச்சர் விஜய் தான். தவெக கட்சியில் பெண்களை வேறு விதமாக பயன்படுத்த பார்க்கிறார்கள். நாள்தோறும் பத்திரிகையில் செய்தி வருகிறது. என் பொண்டாட்டியை அந்த நிர்வாகி கூட்டிட்டு போய்ட்டான் என ஓப்பனாக பேட்டியளிக்கிறார்கள்.

விஜய் உம்மணாமூஞ்சி முதலமைச்சர்
அந்தக் கட்சி தமிழக வெற்றி கழகம் இல்லை. தமிழக பாலியல் வெறி கழகமாக அது மாறியுள்ளது. ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு மனுசனை கடிச்சான் என சொல்லுவார்கள். கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஒரு மாவட்ட ஆட்சியருக்கே நூல் விட்டிருக்கிறான்யா. நூல் என்றால் சாதாரண நூல் இல்லை. எப்படி செய்கிறார்கள் பாருங்க. மாநிலத்தில் இத்தனை சம்பவம் நடக்கிறது. தமிழக முதலமைச்சர் உம்மணாமூஞ்சி முதலமைச்சராக உள்ளார்.
விஜய் நடித்த படங்களை பாருங்க. என்ன நடிப்பு.. என்ன டெயலாக். கதை, வசனம் எழுதி கொடுத்ததை பேசுவார். இவராவா அதை பேசினார். அந்தந்த டைரக்டர்கள் சொல்லி விஜய் பேசியதை நம்பி மக்கள் வாக்களித்தனர். தேர்தலுக்கு முன்பு, தவெகவினரை எம்எல்ஏக்களாக தேர்வு செய்தால் எல்லை சாமியான நின்று காப்பாற்றுவார்கள் என விஜய் கூறினார். எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் எல்லாரும் பாலியல் தொல்லை சாமிகளாக மாறியுள்ளனர். இதை நாங்கள் சொல்லவில்லை.
மோடி சாட்டையை சுழற்ற போகிறார்
இந்த ஆட்சியை நடத்துவது ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி. தமிழகத்தை ஆந்திரா வழிநடத்துகிறது. அவர்கள் தலைமையில் தான் ஆட்சி செல்கிறது. விஜய் என்ன பேச வேண்டும், எங்கு பேச வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கிறார்கள். நம்ம மோடிஜி மக்களுக்கு நடக்கும் அநீதிகளை கண்டிப்பார். அவர் சாட்டையை சுழற்ற போகிறார். இந்த ஆட்சி அவ்வளவு தான். எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளே செல்வார்கள்.
விஜய் ஆட்சி நீடிக்காது. உண்மையான விடியல் பிறக்கும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார். மக்கள் உணர்ந்துவிட்டனர். கூட்டணி கட்சிகள் காரணமாக, தவெக இடைத்தேர்தலில் கூடுதல் வாக்கு வாங்கியுள்ளது. வர இடைத்தேர்தலில் அதிமுக, திமுக தான் போட்டியில் இருக்கும். இரண்டு கட்சிகளை கேலி பேசிய தவெகவை மக்கள் தூக்கி வீசுவார்கள். 5 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்" என்றார்.


Click it and Unblock the Notifications
