6 மாசம் கூட தாங்காது இந்த தவெக ஆட்சி.. விஜய்க்கு எதிராக சாட்டையை சுழற்றும் மோடி! அதிமுக மாஜி பகீர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சமூக வலைதளங்களில் ரீல் வெளியிடுவதைப் போலவே தவெக ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள் எனவும், 6 மாத தவெக ஆட்சியில் தமிழகம் பின்னோக்கிச் சென்றுள்ளது.. தவெக ஆட்சியில் 30 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் உள்ளனர், ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தவெக ஆட்சி நிர்வாகத் திறனற்ற ஆட்சியாக உள்ளது.

Sellur Raju

தீபாவளி பண்டிகை அன்று மட்டும் 17 கொலைகள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் சம்பவங்களே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

செல்லூர் ராஜூ

மாற்றத்தைத் தருவோம், ஏற்றத்தைத் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதல்வர் விஜய் எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்து வருகிறார். முதல்வர் விஜய் நாள், நட்சத்திரம் பார்த்துத்தான் செய்தியாளர்களைச் சந்திப்பாரா? ஜோசியர் சொன்னால்தான் செய்தியாளர்களிடம் பேசுவாரா?

தவெக ஆட்சி

மேலும், தவெக ஆட்சியில் நிதி வீணடிக்கப்படுவதாகவும், கல்லூரி மாணவர் ஒருவர் நூல் விடுவதைப் போல எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியருக்கு நூல் விட்டுள்ளதாகவும் விமர்சித்தார். ஆறு மாத தவெக ஆட்சியில் தமிழகம் பின்னோக்கிச் சென்றுள்ளது. எம்.எல்.ஏ-க்களை முதல்வர் விஜய் அழைத்து 'லியோ' திரைப்பட பாணியில் கண்டிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு பட்டுச் சேலை, சட்டை, வேஷ்டி வழங்கியுள்ளார். தவெகவில் சுமார் 30 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களைச் சமாதானப்படுத்தவே முதல்வர் விஜய் அழைத்துப் பேசியுள்ளார்.

நிர்மல் குமார்

தவெக ஆட்சியில் வசூல் நடைபெற்று வருவதாகவும், ரேஷன் கடைகளில் ரூ.5,000 கேட்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு அமலில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மதுரைக்கு அமைச்சர் நிர்மல் குமார் இதுவரை எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் செய்யவில்லை. சமூக வலைதளங்களில் ரீல் வெளியிடுவதைப் போலவே தவெக ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

நரேந்திர மோடி

தவெக ஆட்சிக்கு அதிமுக சார்பில் ஆறு மாத கால அவகாசம் வழங்கியிருந்தோம். இனி வரும் காலங்களில் தவெக அரசைக் கண்டித்து வாரந்தோறும் அதிமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். மேலும், பிரதமர் மோடி தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றப்போகிறார். மோடி அவர்களுக்கு முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.

ஆட்சி நீடிக்காது

தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்றும், அதற்கு முன்பாகவே ஆட்சி கலைந்து விடும் என்றும் தனது அரசியல் கருத்தைத் தெரிவித்த செல்லூர் ராஜு, விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்.
தவெக ஆட்சிக்கு அதிமுக சார்பில் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராட்டங்கள் நடத்தப்படும்" என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+