கமல்ஹாசனால் நிச்சயம் முதல்வர் ஆக முடியும்.. ஆனால்.. அதிர்ச்சி பதிலளித்த செல்லூர் ராஜூ

Subscribe to Oneindia Tamil

மதுரை: மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர் கமல்ஹாசன் இல்லை என்பதை கடந்த தேர்தல் முடிவுகள் சொல்லுகின்றன. அவரை நடிகராகவே மக்கள் பார்க்கிறார்கள் என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை வார்டு 22 ல் உள்ள எச்எம்எஸ் காலனி 11 தொட்டி அருகில் ரூ.39.55 லட்சம் மதிப்பிலான புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று காலையில் நடைபெற்றது. முன்னதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில் மதுரையைச் சுற்றி உள்ள 1535 கண்மாய்கள், குளங்கள் குடி மராமத்துப் பணியின் மூலம் தூர்வாரப்படுவது போன்று மதுரை மாநகருக்குள் உள்ள தெப்பக் குளங்களும் மழைக்காலத்தில் மழை நீரை சேமிக்கும் வண்ணம் தூர்வாரப்படும்.

காவல் நிலையங்கள்

காவல் நிலையங்கள்

மதுரையில் கொலை, கொள்ளை அதிகரித்து உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளதற்கு காரணம் பழிவாங்கும் நோக்கம் தான். ஆனால் அதற்கேற்ற காவல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. தற்போது அண்ணா பேருந்து நிலையம் மற்றும் திருப்பாலை ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

நிலைமை அப்படி இல்லை

நிலைமை அப்படி இல்லை

இன்னும் காவல் நிலையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே உண்மை. சட்டம் ஒழுங்கை பொறுத்தவரையில் கடந்த திமுக ஆட்சியில் திமுகவினரே கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டார்கள். ரவுடித்தனம் செய்தார்கள். ஆனால் எங்கள் ஆட்சியில் நிலைமை அப்படி இல்லை.

ஜனநாயகத்தின்

ஜனநாயகத்தின்

கமல்ஹாசன் சினிமாவில் தான் முதல்வராக முடியும். நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவுகள் மக்கள் அவரைத் தலைவராகப் பார்க்கவில்லை என்பதையே காட்டுகிறது. மக்கள் தான் எஜமானர்கள். ஜனநாயகத்தின் இறுதிக் காவலர்கள்.

ஜெ.ஆட்சி

ஜெ.ஆட்சி

அவர்கள் அம்மாவின் ஆட்சியை, அதிமுக கட்சியை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். எம்ஜிஆரின் தொப்பியும் கண்ணாடியும் ஊர்வலமாகச் சென்றாலே ஓட்டு விழும். தெய்வம் தேரில் வந்தாலே மக்கள் கூடுவார்கள், ஆனால் அம்மா காரில் வந்த போது மக்கள் வெள்ளம் சூழும்.

விமர்சனம்

விமர்சனம்

மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர் கமல்ஹாசன் இல்லை என்பதை கடந்த தேர்தல் முடிவுகள் சொல்லுகின்றன. அவரை நடிகராகவே மக்கள் பார்க்கிறார்கள் என செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அதிமுக கூட்டணியோ போட்டியிட்ட 39 எம்பி தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+