“யாராவது கிளம்பினா ரத்தம் கக்கி சாவீங்க.. மந்திரம் போட்டு வச்சிருக்கேன்” பீதியாக்கிய செல்லூர் ராஜூ!
மதுரை: "நான் பேசும்போது நடுவில் யாராவது எழுந்து போனா ரத்தக் கக்கி சாவீங்க" என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாபம் விட்டதால் கூட்டத்திற்கு வந்த அதிமுகவினர் பீதி அடைந்தனர்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுகவை பொறுத்தவரை, தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது அதிமுக. மொத்தமாக 35 வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகின்றனர். மதுரை லோக்சபா தொகுதியில் டாக்டர் சரவணன் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், மதுரையில் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் செல்லூர் ராஜு பேசிக் கொண்டிருந்தபோது அதிமுகவினர் சிலர் கூட்டத்தில் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். இதையடுத்து, கூட்டத்தில் இருந்து எழுத்த தொண்டர்களை அமருமாறு நிர்வாகிகள் மேடையில் இருந்து அறிவுறுத்தினர்.
இதையடுத்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "நான் பேச துவங்குகிறேன். கூட்டத்தில் நான் பேசும்போது இடையில் யாரும் பேசக்கூடாது. நடுவுல எழுந்து போகக்கூடாது. போனா வீடு போய்ச் சேர்வதற்குள் ரத்தம் கக்கி சாவீங்க. 5 நிமிடம் டைம் தருகிறேன். அப்போது எழுந்து போகலாம். நான் ஒரு மந்திரம் போட்டு விட்டுத் தான் கூட்டத்திற்கு வந்தேன்." என கலகலப்பாகப் பேசினார்.
இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் செல்லூர் ராஜூ விட்ட சாபத்தால் முதலில் பீதி அடைந்து, பின்னர் நகைச்சுவையை உணர்ந்து வாய்விட்டுச் சிரித்தனர். வேட்பாளர் டாக்டர் சரவணனும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பொதுக் கூட்டங்களிலும் சரி, பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி, ஜாலியாக கமெண்ட் அடிப்பது செல்லூர் ராஜூவின் வழக்கம்.
அந்தவகையில், தேர்தல் நெருங்கும் பரபர சூழலிலும், கூட்டங்களில் நகைச்சுவை கமெண்ட்களை அடித்து அதிமுகவினரை குதூகலப்படுத்தி வருகிறார் செல்லூர் ராஜூ. செல்லூர் ராஜுவின் கமெண்ட்டால் தேர்தல் சூட்டுக்கு மத்தியில் மதுரையில் அதிமுகவினர் குளிர்ந்து சிரித்தனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications