“SIR பணிகளில் ஆளுங்கட்சி மோசடி.. நாங்க மட சாம்பிராணியா இருக்கோம்” - செல்லூர் ராஜூ ஆவேசம்!
மதுரை: "மதுரையில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, அதில், நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம். போலி வாக்காளர்களை வைத்து திமுக வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளது." என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
SIR பணியில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ,"SIR கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முழுமையாகச் செயல்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். சத்துணவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

மதுரையில் பல பகுதிகளில் SIR கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை. வாக்காளரிடம் வழங்கப்பட்ட SIR படிவங்கள் பல இடங்களில் திரும்பப் பெறவில்லை. மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளிலும் SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அப்லோடு செய்துள்ளனர். இதில் எவ்வளவு படிவங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை.
பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு SIR செயலியை செயல்படுத்த தெரியவில்லை. சிலருக்கு நெட் வசதி இல்லை, பலருக்கு ஆப் பயன்படுத்தும் வகையில மொபைல் போன்கள் இல்லை. கட்சி முகவர்கள்தான் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இறந்து போனவர்களையும், 2 வாக்கு உள்ளவர்களையும் நீக்க வேண்டும் என்பதுதான் வாக்காளர் திருத்தப் பட்டியலின் நோக்கம். கணக்கெடுக்கும் பணி இப்படி நடந்தால் அந்த நோக்கமே நிறைவேறாது.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் SIR பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம். ஒரு சில வாக்குகளை மட்டும் எடுத்துவிட்டு அத்தனை வாக்குகளையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்கிற அச்சம் வருகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறி வருகிறார். போலி வாக்காளர்களை வைத்து திமுக வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளது. SIR கணக்கெடுப்பில் மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் ஆளும் கட்சி மோசடியில் ஈடுபட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications