வடிவேலு மாதிரியே பேசுறாரே மு.க.ஸ்டாலின்.. கலாய்க்கும் செல்லூர் ராஜு
Recommended Video
மதுரை: வடிவேலு காமெடி பாணியில் நானும் ஜெயிலுக்கு போகிறேன், ஜெயிலுக்கு போகிறேன், என்று ஸ்டாலின் பேசி வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலை பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வை கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் துவங்கி வைத்தனர். விழாவில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளவில்லை. எதற்காக பணி நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிவார்கள்
திமுக கூட்டணியில் இருக்கும் பிரச்னையால் அதிமுகவிற்கு பிரச்னை இல்லை எங்கு தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்.
இறக்குமதி செய்தால் தான் திமுகவில் 2 லட்சம் பேரை சேர்க்க முடியும. ஒரு நாடு ஒரு ரேசன் திட்டம் அருமையான திட்டம். அதை விமர்சிக்க கூடாது. கோப்பு கையெழுத்தாகும் முன் எதிர்கட்சிகள் குதிக்கின்றன. மற்ற மாநிலத்திலிருந்து வருவோருக்கு அரிசு அல்லது கோதுமை மட்டுமே வழங்குவோம். மற்ற மாநிலத்தவருக்கு பிற பொருட்கள் கிடையாது.

மத்திய தொகுப்பிலிருந்து அவர்கள் அரிசி வழங்குகிறார்கள் அதை அவர்களுக்கு வழங்க போகிறோம். அந்தந்த மாநிலத்தில் என்ன விலையோ அந்த விலைக்கு தான் அரிசி, கோதுமை வழங்கப்படும். நானும் ஜெயிலுக்கு போறேன்.... நானும் ஜெயிலுக்கு போறேன் என்பதே திமுகவின் செயல்பாடு.
வெளிநாடு அழைத்து செல்லாததால் அமைச்சர்கள் யாரும் அதிருப்தி இல்லை, ஜெயலலிதா இருக்கும் போது 2015ல் என்னை வெளிநாடு செல்ல அனுமதித்தார். வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டு என் பயணம் தடையானது.
ராதாரவி அதிமுகவில் இணைந்தவர் என்றாலும் ரஜினி குறித்த அவரது கருத்து பற்றி எதுவும் கூற முடியாது. ராதாரவி இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவரது புகைப்படத்தை மறந்துவிட்டனர். பொறுப்பு கலைஞரின் புகைப்படத்தையும் மறந்துவிடுவார்கள். திமுகவில் தற்போது எதிர்காலம் இல்லை என்று பேசினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications