மண் மணக்கும் மதுரையில்.. பரோட்டா போட தனி கோச்சிங் சென்டர்! தினமும் 2 மணி நேரம்! கட்டணம் ரூ.4,000!
மதுரை: மதுரையில் பரோட்டா போடுவதற்கு பயிற்சி வழங்குவதற்காக ஒரு தனி கோச்சிங் செண்டரே இயங்கி வருகிறது.
நீட் பயிற்சி மையம், குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம், என எத்தனையோ பயிற்சி மையங்களை நாம் அறிந்திருப்போம்.
ஆனால் பரோட்டா போடுவது எப்படி என்பதை சொல்லிக்கொடுக்க தனி பயிற்சி மையமே மதுரையில் இயங்கி வருவதை இப்போது தான் அறிகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாநகரம்
மதுரையை பொறுத்தவரை ஒரு வித்தியாசமான மாநகரம் என்பதை அங்கு நடக்கும் நிகழ்வுகள் அடிக்கடி உணர்த்தி வருகின்றன. ரசிகர்களோ, அரசியல் கட்சியினரோ, ஒரு போஸ்டர் அடித்தால் கூட அந்த போஸ்டர் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தான் இருக்கும். அந்தளவு புதுமையான வித்தியாசமான வாசகங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் மதுரையிலிருந்து நமக்கு கிடைத்த புது தகவல் அங்கு பரோட்டா போடுவதற்கென தனி கோச்சிங் செண்டர் இயங்கி வருவது என்பது தான்.

பரோட்டா போட பயிற்சி
இதை படிக்கும் பலருக்கும் என்னாது பரோட்டா போட ஒரு பயிற்சி மையமா என்ற கேள்வி எழுவதுடன், சிரிப்பும் வரும். ஆனால் தனது தொழிலில் மாற்றியோசித்து அதற்கு செயல்வடிவமும் கொடுத்திருக்கிறார் மதுரையை சேர்ந்த முகமது காசிம். இவரிடம் நாம் பேசிய போது, கடந்த 4 ஆண்டுகளாக பரோட்டா போட பயிற்சி வழங்கி வருவதாகவும், பேட்ஜ் வாரியாக கிளாஸ் நடத்தப்படுவதாகவும் கூறினார். தினமும் 2 மணி நேரம் என்ற அடிப்படையில் 10 நாள் பயிற்சி தரப்படும் எனக் கூறினார்.

ரூ.4,000 கட்டணம்
இதற்கான கட்டணமாக ரூ.4,000 பெறுவதாக அவர் தெரிவித்தார். கொத்து பரோட்டா, பன் பரோட்டா, வீச்சு பரோட்டா, சாதாரண பரோட்டா, காயின் பரோட்டா, என பரோட்டாவில் என்னென்ன வகைகள் உள்ளதோ அனைத்து வகைகளையும் சொல்லிக் கொடுப்பதாக கூறும் காசிம், தனது பயிற்சி மையத்தில் பரோட்டா போட கற்றுக்கொண்ட பலரும் வளைகுடா நாடுகளில் நல்ல சம்பளத்தில் பரோட்டா மாஸ்டர்களாக பணியாற்றி வருவதாக பெருமிதம் தெரிவிக்கிறார்.

பட்டதாரி இளைஞர்கள்
பரோட்டா மாஸ்டர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, உள்ளிட்ட பல மாநிலங்களிலும், அரபு நாடுகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் பட்டதாரி இளைஞர்களும் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து பரோட்டா போடக் கற்றுக் கொண்டது தான் இதில் ஹைலைட்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications