பாண்டியன் மண்ணுக்கு விடிவுகாலம்.. மதுரை ராக்கெட் வேகத்தில் உயரப்போகுது.. லட்டு மாதிரி வந்த அறிவிப்பு
மதுரை: மதுரையில் ஏற்கனவே சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டு உள்ள நிலையில் மதுரைக்கு இரண்டாவது சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இலுப்பக்குடி தொழில் பூங்கா 2026 ஆம் ஆண்டின் செயலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பல தமிழ்நாட்டில் இரண்டாம் டயர் மாவட்டங்களில் சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் அமைக்கப்படும் சிப்காட் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் சிப்காட் பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைய சிப்காட் மிகப்பெரிய காரணம் ஆகும்.

அந்த வகையில் 8 இடங்களில் சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 8 புதிய SIPCOT பூங்காக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது:
1. ஸ்ரீபெரும்புதூர்- 750 ஏக்கர்
2. சென்னை ORR - 200 ஏக்கர்
3. ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி - 1,000 ஏக்கர்
4. பெரம்பலூர்- 100 ஏக்கர்
5. திருவெறும்பூர், திருச்சி- 150 ஏக்கர்
6. கும்மிடிப்பூண்டி, சென்னை - 1,500 ஏக்கர்
7. அரியலூர்- 150 ஏக்கர்
8. மன்னார்குடி- 150 ஏக்கர்
அசத்தல் முடிவு: அதன் ஒரு கட்டமாக பின் வரும் நகரங்களை புதிய தொழில் பூங்காக்களின் அமைப்பை சிப்காட் அமைக்க தொடங்கியுள்ளது.
1. திருமுடிவாக்கம், சென்னை
2. தேனி (உணவு+ மல்டி பார்க்)
3. காட்பாடி
4. பணப்பாக்கம், ராணிப்பேட்டை
5. வாரப்பட்டி, கோயம்புத்தூர்
6. தருமபுரி
7. நாகப்பட்டினம்
8. பாடலூர், பெரம்பலூர்
9. விருதுநகர்- பி.எம்.மித்ரா டெக்ஸ்டைல் பார்க்
10. செங்காத்தாகுளம், திருவள்ளூர்
11. சிவகங்கை (2 கட்டங்கள்)
12. ஏ.சாத்தனூர் SEZ, கள்ளக்குறிச்சி
13. வைப்பார், தூத்துக்குடி
14. வேலாயுதபுரம், தூத்துக்குடி
15. மணக்குடி, ராமநாடு
16. சேலம் ஜவுளி பூங்கா
17. தலைவாசல், கள்ளக்குறிச்சி
18. சக்கரகோட்டை, ராமநாடு
19. மணல்லூர் (EV & EMC), திருவள்ளூர்
சிவகங்கை பூங்கா:
சிவகங்கை மாவட்டத்தில் இலுப்பைக்குடி, கிளாத்தாரி, அரசனூர் ஆகிய கிராமங்களில் 775.75 ஏக்கரில் ₹342 கோடியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பூங்கா 36,500 வேலைகளை உருவாக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், ஜவுளிகள் மற்றும் பல துறைகளில் தொழில்களை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதலீடுகளை அதிகரிக்கவும், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தவும் இந்த சிப்காட் பூங்கா மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். இந்த சிப்காட் மூலம், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் மேம்படும்.. அதோடு பெரிய உற்பத்தி மையமாக சிவகங்கை மாறும் வாய்ப்பு உள்ளது.
அடிக்கல் நாட்டு விழா:
இது போக தமிழ்நாட்டில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக 6,035 ஏக்கரில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
1. விருதுநகர்
2. தருமபுரி
3. தேனி
4. சிவகங்கை
5. தூத்துக்குடி (வைப்பார்)
6. ராமநாதபுரம்-1
7. ராமநாதபுரம்-2
ஆகிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Foxconn, Kaynes, FreeTrend, Tata Motors, Rockwell, Nokia, Leap Green போன்ற பல நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் முக்கிய முதலீடுகளை செய்து உள்ளன. சீனா + 1 எனப்படும் மாடலின் அடிப்படையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளியே உற்பத்தி செய்ய பல நிறுவனங்கள் நினைக்கின்றன. அவர்களின் தேர்வாக தமிழ்நாடே இருக்கிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications