வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நிலைமை எல்லை மீறி போய்விட்டது.. பயணி வெளியிட்ட அழுத்தமான பதிவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: "வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நிலைமை எல்லை மீறி போய்விட்டது. கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த பயணிகள் நின்று கொண்டு பயணிக்கும் அதேநேரம், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் அனைத்தும் பொதுப் பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. TTE-க்களும் RPF-ம் எங்கே போனார்கள்? முன்பதிவு என்றால் முன்பதிவு என்றுதானே அர்த்தம்!" என்று நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரது முன்பதிவு டிக்கெட்டில் மொத்தமாக வந்து பலர் அமருவது நியாயமே இல்லை என்பது ஒருபுறம் எனில், அவர்களுக்கு போதிய ரயில்கள் விடப்படவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. உண்மையில் சென்னையில் இருந்து மதுரைக்கோ, மதுரையில் இருந்து சென்னைக்கோ அரசு பேருந்து அல்லது ஆம்னி பேருந்துகளில் ஒருவர் செல்லும் கட்டணத்தில் மூன்று பேர் முதல் ஐந்து பேர் வரை தாராளமாக ரயிலில் சென்றுவிட முடியும். இதனால் ஏழை எளிய மக்கள் எல்லாருமே ரயிலை தான் முதல் தேர்வாக நாடுகிறார். அவர்களுக்கு போதிய இருக்கை வசதி இல்லாத காரணத்தால், அவர்கள் வேறுவழியின்றி முன்பதிவு பெட்டியில் ஏறி பயணிப்பது தொடர்கிறது.

Situation on the Vaigai Express has crossed all limits A hard-hitting post shared by a passenger

ரயில்வே இந்த பிரச்சனையை முடிந்த வரை மனிதாபிமானத்துடன் தான் அணுகி வருகிறது. எனினும் முன்பதிவு செய்த பயணிகள் கழிவறைக்குகூட செல்ல முடியாத அளவிற்கு மிகுந்த நெரிசல் ஏற்படுவதால், முன்பதிவு செய்த பயணிகளுமே தீராத துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த நெட்டிசனுக்கு நடந்தது போல் பலருக்கும் நடந்துள்ளது. நடந்து வருகிறது.

ரயில்வே விதிமுறைகளின் படி பார்த்தால், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பொதுப் பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க வேண்டியது ரயில்வே அதிகாரிகளின் கடமை ஆனால் டிடிஆர் மற்றும் ரயில்வே போலீசார் கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை.. சில நேரங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட் செக்கிங் செய்யக்கூட வருவதும் இல்லை..

இப்படியான சூழலில் பயணிகள் சிக்கினால் உடனே RailMadad செயலியில் புகார் அளிக்கலாம். அதேபோல் railmadad.indianrailways.gov.in இணையதளத்தில் உங்கள் பி.என்.ஆர் எண்ணைப் பதிவிட்டு, பெட்டியின் எண்ணைக் குறிப்பிட்டு உடனே புகார் அளிக்கலாம். பொதுவாக இந்தச் செயலியில் அளிக்கப்படும் புகார்களுக்கு அடுத்தடுத்த இரயில் நிலையங்களிலேயே ரயில்வே அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுப்பார்கள். மிக மோசமனா நிலை என்றால் 139 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து உங்கள் முன்பதிவு பெட்டியில் உள்ள நெரிசல் குறித்துப் புகார் தெரிவிக்கலாம்.

X (ட்விட்டர்) தளம் மூலம் புகார் அளித்து நிவாரணம் பெறலாம். உங்களுடைய பயணத்தின் PNR எண் மற்றும் புகைப்படங்கள்/வீடியோவை இணைத்து @RailMinIndia, @GMSRailway, மற்றும் @DrmMadurai ஆகிய அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) கணக்குகளை டேக் (Tag) செய்து பதிவிடலாம். அவர்கள் நிச்சயம் உங்கள் புகாரின் பேரில் உடனே நடவடிக்கை எடுப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+