டபுள் ஷாக்! சின்ன வெங்காயம்.. பெரிய விலை - ரூ.200 ஐ தாண்டிருச்சாம்.. தக்காளிக்கே டஃப் கொடுக்குதே
மதுரை: தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலையும் 200 ரூபாயை தாண்டி இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
சமையலுக்கு அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை ரூ.100 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

முந்தைய நாட்களை ஒப்பிடுகையில் சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை ஓரளவு குறைந்து ரூ.80 முதல் ரூ.100 க்கு விற்கப்படுகிறது. ஆனால், டபுள் ஷாக்காக சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை இன்று மேலும் அதிகரித்து ரூ.160 முதல் ரூ.200 க்கு மொத்த விற்பனையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.220 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படும் என்று அஞ்சப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை தக்காளியை போன்றே கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் ஒரே நாளில் ரூ.20 வரை அதிகரித்து உள்ளது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நேற்று ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம், தற்போது ரூ.200 ஐ தாண்டி இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளார்கள். வரத்து குறைந்துள்ளதன் காரணமாகவே சின்ன வெங்காயத்தின் விலை இப்படி உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.
இன்று காலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்ற மக்கள் சின்ன வெங்காயத்தின் விலையை கேட்டு ஆடிப்போய் உள்ளனர். அத்தியாவசிய காய்கறிகளான வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றின் விலை பன்மடங்கும் அதிகரித்து இருப்பது சாமானிய மக்களை கடுமையாக பாதித்து உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications