நீதிபதியா இருந்தா என்ன? மதுரை குடமுழுக்கில் தலைமை நீதிபதியை அவமதித்தாரா அமைச்சர் ஜெகதீஸ்வரி?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா குடமுழுக்கு விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு, குடிநீர் தெளிப்பு, விஐபி கலாச்சாரம் என அடுத்தடுத்துப் புகார்கள் வெடித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியையே அமைச்சர் ஒருவர் அலட்சியமாகப் பேசி அவமதித்ததாகப் புதிய பூகம்பம் வெடித்துள்ளது.

"தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?" என்று முன்வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளிடம் ஆவேசமாகக் கூறியது, அங்கிருந்த நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

madurai

குடமுழுக்கு விழாவில் நிகழ்ந்தது என்ன?

17 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவைக் காண சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மதுரைக்கு வருகை தந்திருந்தார். ஆனால், விழாக் களத்தில் நிலவிய கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, தலைமை நீதிபதிகூட உள்ளே செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இதைத் தொடர்ந்து, அங்கிருந்த உயர் அதிகாரிகள் மற்றும் பிற நீதிபதிகள் சிலர், விஐபி பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்ட முன்வரிசைக்கு விரைந்து சென்றனர். அங்கு அமர்ந்திருந்த அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம், "சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வந்துள்ளார்; அவர் உள்ளே வர வழி ஏற்படுத்தித் தர வேண்டும்" என்று அவசர தகவலாகத் தெரிவித்தனர்.

தலைமை நீதிபதியா இருந்தா என்ன? - அமைச்சரின் அலட்சியப் பதில்

அதிகாரிகள் சொன்ன தகவலைக் கேட்டு உடனடியாக வழிவிடுவார் அல்லது உரிய ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அமைச்சர் ஜெகதீஸ்வரி எவ்விதப் பொறுப்பும் இன்றி, "அவர் தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?" என்று மிக அலட்சியமாகவும் திமிராகவும் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

அமைச்சரின் இந்தத் தடித்த வார்த்தைகளைக் கேட்டு அங்கிருந்த சக நீதிபதிகளும், அரசு அதிகாரிகளும் ஒரு கணம் நிலைகுலைந்து போயினர். ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையின் தலைவரையே, ஆளும்கட்சி அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக அவமதித்துப் பேசியது அங்கிருந்தவர்களைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

இதையடுத்து, அமைச்சரை நம்பிப் பயனில்லை என்பதை உணர்ந்த பிற நீதிபதிகளே நேரடியாகக் களத்தில் இறங்கி, தங்களுக்குள் ஒரு வழியை ஏற்படுத்தி, தலைமை நீதிபதியை மிகுந்த சிரமத்திற்கு இடையே அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

அதிகார மமதையின் உச்சம்: வெடிக்கும் கண்டனங்கள்

ஏற்கனவே பொதுமக்களை உள்ளே விடாமல் தடுத்துத் தவெக அரசு அலைக்கழித்த விவகாரத்தில் மக்கள் ஆவேசத்தில் இருக்கும்போது, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கே இந்த நிலையா என்று சமூக வலைதளங்களிலும் சட்டத்துறை வட்டாரங்களிலும் கண்டனக் குரல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

மாநிலத்தின் சட்டத்துறையின் உச்சப் பொறுப்பில் இருக்கும் தலைமை நீதிபதிக்கே உரிய புரோட்டோகால் மற்றும் பாதுகாப்பு வழங்காமல் தவிக்கவிட்டது ஏன்?

அமைச்சரவையில் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவர், நீதித்துறையை இவ்வளவு கொச்சைப்படுத்திப் பேசுவது அதிகார மமதையின் வெளிப்பாடு இல்லையா?

பக்தர்களை ஏமாற்றியது போதாது என்று, நீதித்துறை மாண்பையும் காலில் போட்டு மிதிப்பதா? என்று வழக்கறிஞர்களும் பொதுமக்களும் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மதுரை மண்ணில் நடந்த இந்த ஆன்மிகத் திருவிழா, ஆன்மிக அமைதியைத் தருவதற்குப் பதிலாக, அமைச்சர்களின் ஆணவப் பேச்சுகளாலும், நிர்வாகச் சீர்கேடுகளாலும் மக்களையும் சட்ட வல்லுநர்களையும் ஒரே நேரத்தில் கொதிப்படைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+