"மோனிஷா இல்லாமல் வாழ்வதா".. டிரான்ஸ்பார்மரை நோக்கி ஓடிய சக்தி.. தூக்கி வீசப்பட்டார்!
மதுரை: "மோனிஷா இல்லாமல் என்னால வாழவே முடியாது" என்று புலம்பி கொண்டே இருந்தார் சக்தி.. தற்கொலை செய்யபோகிறேன்.. என்று மிரட்டல் விடுத்தவாறு டிரான்பார்மரில் ஏறியவருக்கு நிஜமாகவே கரண்ட் அடித்து தூக்கி வீசப்பட்டார்.. இந்த பகீர் வீடியோவும் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.
மதுரையை சேர்ந்த தம்பதி சக்தி - மோனிஷா.. சக்தி ஒரு ராணுவ வீரர்.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 4 மாதம்தான் ஆகிறது.
கல்யாணம் ஆன சில நாட்களில் சக்தி வராணுவ பணிக்கு சென்றுவிட்டார்.. அதனால் மோனிஷா மட்டும்தான் மாமியார் வீட்டில் தங்கி இருந்தார்.. அப்போது சக்தியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மோனிஷா
இந்த சமயத்தில் லீவில் சக்தி ஊருக்கு வந்தார்.. அப்போது, திரும்பவும் வரதட்சணை பிரச்சனை ஆரம்பமானது.. இதனால் மனமுடைந்த மோனிஷா 3 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதில் உண்மை காரணம் தெரியவில்லை.

சக்தி
இதனால், போலீசார் இது சம்பந்தமாக விசாரித்து வந்தனர்.. மற்றொரு புறம் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.. இந்த விசாரணைக்காக மதுரை கலெக்டர் ஆபீசுக்கு சக்தியின் குடும்பத்தினர் வந்திருந்தனர். ஏற்கனவே மோனிஷா மரணம், விசாரணை என்று விரக்தியில் இருந்த சக்தி, திடீரென்று டிரான்ஸ்ஃபார்மரில் ஏறி தற்கொலை செய்ய போகிறேன் என்று சொன்னார்.

கூச்சல்
அதன்படியே கலெக்டர் ஆபீஸ் எதிரில் இருந்த டிரான்ஸ்பார்மரிலும் ஏறிவிட்டார்.. இதை பார்த்து பதறிய பொதுமக்களும், உறவினர்கள் பதறினர்.. கீழே இறங்கும்படி கத்தி கூச்சலிட்டனர்.. ஆனாலும் சக்தி இறங்கவே இல்லை.. கொஞ்ச நேரத்தில் அங்கிருந்த மின் கம்பியில் அவரது கைபட்டுவிட்டது.

அனுமதி
வோல்டேஜ் அதிகம் என்பதால், டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி சக்தி தூக்கி வீசப்பட்டார். உடனே பொதுமக்கள் அவரை மீட்டு ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. தீவிரமான சிகிச்சையும் நடந்து வருகிறது. இப்போது சக்தியின் நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாம்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications