Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாலமன் பாப்பையா கேட்ட கேள்வி.. "முருகன் நேரில் வந்து சொல்லணுமா?" உடனே கிளம்பி வந்த இந்து அமைப்புகள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் குறித்து பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா பேசிய கருத்துக்கள், மதுரை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக மதுரை முருக பக்தர்கள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்து மக்கள் கட்சியும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. என்ன நடந்தது?

2 வருடங்களுக்கு முன்பு ஒரு டிவி நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.. அந்த பட்டிமன்ற இறுதியில் பேசும்போது, ஆங்கிலேயே கிறித்தவர்கள் வந்துதான் கல்வி கொடுத்தார்கள் என்று சாலமன் பாப்பையா கூறியிருந்தார்.

Solomon Pappaiah

இதற்கு உடனடியாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்தது.. அதன் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் மிக நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்..

சாலமன் பாப்பையா

அதில், "மெக்காலே வகுத்த கல்வி முறை பாரதத்தின் மருத்துவம், விவசாயம் மற்றும் பாரம்பரியக் கல்வி முறையைத் திட்டமிட்டு அழித்தது.. நமது கலாச்சாரத்தை இகழ்ந்து குமாஸ்தாக்களை உருவாக்கும் ஆங்கிலேய சூழ்ச்சியை பாரதியாரே கண்டித்துள்ளார். இந்த காலனிய சிந்தனையின் தொடர்ச்சியாகவே சாலமன் பாப்பையாவின் பேச்சு அமைந்துள்ளது.

மிஷனரிகளின் தாக்கத்திலிருந்து மாணவர்களைக் காக்க அழகப்பா செட்டியார், பச்சையப்பன் முதலியார் போன்ற வள்ளல்களும் சைவ ஆதீனங்களும் கல்விப் பணியாற்றி வந்துள்ளனர்.. ஜி.யு. போப் போன்றவர்கள் திருக்குறளை மொழிபெயர்த்தது மதமாற்றத்திற்காகக் கட்டிய வேடமே தவிர தமிழ்ப்பற்றல்ல.. பொதுத்தளத்தில் பேசுவோர் வரலாற்றைப் புரிந்து பேச வேண்டும்..

திருப்பரங்குன்றம் தீபத்தூண்

லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் ஊடகத்தில் இதுபோன்ற தவறான கருத்துகள் பேசுவது அறிவார்ந்த செயல் இல்லை.. அறிவார்ந்த பாப்பையா, சபாநாயகர் அப்பாவு போல் பேசுவது வேதனை தருகிறது" என்றெல்லாம் அந்த அறிக்கையில் வேதனை தெரிவித்திருந்ததை இங்கு நாம் நினைவூட்ட வேண்டி உள்ளது..

இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் சாலமன் பாப்பையாவுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.. இதற்கு காரணம், மதுரையில் நடந்த பட்டிமன்றத்தில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து பேராசிரியர் சாலமன் பாப்பையா சர்ச்சையாக பேசியிருக்கிறாராம்..

சமீபத்தில் நடந்த ஒரு விவாத மேடையில், "தீபத்தை மலை உச்சியில் ஏற்றுவது பற்றி சொல்ல முருகன் நேரில் வர வேண்டுமா?" என்று தேவையின்றி திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தைக் கையில் எடுத்து, நீதிமன்ற தீர்ப்பையே சாலமன் பாப்பையாக கொச்சைப்படுத்தியுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முருகன் நேரல் வந்து சொல்லணுமா

திருப்பரங்குன்றம் மலை முருகப் பெருமானுக்கே சொந்தமானது என்றும், அங்கு தீபம் ஏற்றுவது குறித்து நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அதனை ஏளனம் செய்யும் வகையில் சாலமன் பாப்பையா பேசியிருப்பது விஷமத்தனமானது என்று அவர்கள் சாடியுள்ளனர்.

"தீபத்தை மலை உச்சியில் ஏற்றுவது பற்றி சொல்ல முருகன் நேரில் வர வேண்டுமா?" என்ற பாப்பையாவின் கேள்வி, மூன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்றும், இது போன்ற பொறுப்பற்ற பேச்சுகளை அவர் தவிர்க்க வேண்டும் என்றும் பக்தர்கள் சபை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

அர்ஜூன் சம்பத்

அதேபோல இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இதுகுறித்து ஒரு அறிக்கையே வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "சாலமன் பாப்பையா பேசிய பேச்சு இந்துக்கள் மனதை காயப்படுத்தி விட்டது.. நீதிமன்றத்தை அவமதித்துவிட்டது. நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை கொச்சைப்படுத்தி விட்டது... அவர் மீது வைத்திருந்த மதிப்பையும், மரியாதையையும் இழந்து விட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விளக்கம் சொல்ல தயார்

இந்து தரப்பினர் இப்படி கொந்தளித்துள்ள நிலையில், தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் சொல்ல தயார் என்று சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து சாலமன் பாப்பையா சொல்லும்போது, "இந்த விஷயத்தில் அரசியல் செய்கின்றனர். மலையில் இந்த இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என, கடவுள் முருகன் சொல்கிறாரா அல்லது வெளியே உள்ளவர்கள் சொல்கின்றனரா? இந்த விஷயத்தில், தீர்ப்புக்கு மேல் தீர்ப்பு கூறுவது சரிதானா? என் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு விளக்கம் சொல்ல தயாராக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+