விஜய் ஆட்சி எப்படி இருக்கு? இதுவரை நன்றாக இல்லை.. சாலமன் பாப்பையா கொடுத்த கடைசி பேட்டி!
மதுரை: மறைந்த பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா விஜய் ஆட்சி தொடர்பாக பேசியுள்ள கருத்துக்கள் மீண்டும் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி இருக்கிறது. விஜய்யின் முதல் 2 மாத ஆட்சி நன்றால இல்லை என்று நேரடியாக விமர்சித்த சாலமன் பாப்பையா, இனி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பேராசிரியரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக 90 வயதில் காலமானார். பட்டிமன்றம் மூலமாக சாமானிய மக்களின் வாழ்க்கையையும், முற்போக்கு கருத்துக்களை நகைச்சுவையாகவும் மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாற்றியவர். பட்டிமன்றம் என்றாலே பாப்பையா தான் என்ற நிலை மக்களிடையே இருந்து வந்தது.

சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழக மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சாலமன் பாப்பையாவின் கடைசி பட்டிமன்ற நிகழ்ச்சியின் ப்ரோமோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
மறுபக்கம் சாலமன் பாப்பையாவின் கடைசி நேர்காணல் ஒன்றும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் அவரின் ஆட்சி எப்படி இருக்கிறது என்று சாலமன் பாப்பையாயிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சாலமன் பாப்பையா, கொஞ்சம் காலம் போகட்டும் பார்ப்போம். இதுவரை நல்லா இல்லை.. ஒருவேளை இதன்பின் நன்றாக இருந்தாலும், இருக்கலாம்.
அதனால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார். இந்த வீடியோ தவெக மற்றும் திமுகவினர் மத்தியில் அதிகமாக விவாதிக்கப்பட்டது. முற்போக்கு கருத்துக்களை பல்வேறு மேடைகளிலும் பேசியுள்ள சாலமன் பாப்பையா, கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் பட்டிமன்றம் நடத்தி கலைஞர் கருணாநிதியின் பாராட்டுக்களை பெற்றார்.
அதேபோல் முதல்வராக இருந்த போது ஸ்டாலின் மதுரையில் ரோடு ஷோவில் ஈடுபட்ட போது, அவரை வாசலில் நின்று வரவேற்று ஆச்சரியம் கொடுத்தார். உடல்நிலை காரணமாக பட்டிமன்ற நிகழ்ச்சியில் இருந்து சாலமன் பாப்பையா ஓய்வில் இருந்தார். கடந்த மாதம் புத்துணர்ச்சியுடன் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கிய அவர், திடீரென காலமான செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications
