மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அது என்ன பழக்கம் முத்துக்குமார்.. கோபம் வந்தா மாமியார் காதை கடித்து துப்புவது.. மதுரையில் பரபரப்பு

மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன் கைது செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

மதுரை: மனைவியுடன் சண்டை ஓவராக போய்விட்டது.. இதை தடுக்க வந்த மாமியாரின் காதை நறுக்கென கடித்து துப்பிவிட்டார் மருமகன்!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 5 வருஷங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது! லவ் மேரேஜ்!

Son in law stabbed Mother in laws ear near Madurai

ஆனால் இவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால்தான் பிரச்சனையே வெடித்தது. அடிக்கடி சண்டை போட்டு வந்த இவர்கள், ஒரு கட்டத்தில் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்திருக்கிறார்களாம்!

இந்நிலையில், நேற்று முத்துக்குமார் கவிதா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. சண்டை ரொம்ப முற்றி போகவும், பிரச்சனையை தடுக்க கவிதாவின் தாயார் லட்சுமி முன்வந்துள்ளார்.

Son in law stabbed Mother in laws ear near Madurai

ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த முத்துக்குமார், லட்சுமி குறுக்கே வரவும் டென்ஷன் அதிகமாகி அவரது காதை, இழுத்து பிடித்து கடித்து துப்பிவிட்டார். இதில் லட்சுமி வலியால் அலறி துடித்தார். ரத்தம் பொலபொலவென கொட்ட ஆரம்பித்துவிட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து லட்சுமியை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அழகம்மை மருமக புருஷனை வாட்ச் மேனை விட்டு துரத்தி அடிக்கறாளே! அழகம்மை மருமக புருஷனை வாட்ச் மேனை விட்டு துரத்தி அடிக்கறாளே!

தன் கண் எதிரிலேயே பெற்ற தாயின் காதை கடித்து துப்பியதை பார்த்த கவிதா, முத்துக்குமார் மீது போலீசில் புகார் தந்தார். இதையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அது என்ன பழக்கம்.. கோபம் வந்தா காதை கடித்து துப்புவது.. !

English summary
Son in law stabbed Mother in laws ear due to family issue in Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X