விஜய் பக்கம் திரும்பும் செளராஷ்டிரா வாக்குகள்.. அதிமுக, பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி! கள நிலவரம் என்ன?
மதுரை: மதுரையில் முக்குலத்தோர் சமூகத்திற்கு பின் அதிகளவில் வசித்து வரும் செளராஷ்டிரா மக்களின் ஆதரவு இம்முறை விஜய் பக்கம் திரும்புவதாக பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலின் போது செளராஷ்டிரா மக்களின் ஆதரவு பாஜக பக்கம் சென்ற நிலையில், இம்முறை அந்த வாக்குகளை விஜய் அதிகளவில் பிரிப்பதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் மதுரையில் செளராஷ்டிரா மக்களின் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், நாதக தலைவர் சீமான், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அப்போது செளராஷ்டிரா மக்கள் தரப்பில் தங்கள் தரப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகளுக்கே ஆதரவு அளிப்போம் என்று தீர்மானம் போட்டனர்.

மதுரையில் செளராஷ்டிரா மக்கள் தொழில் ரீதியாக ஒருங்கிணைந்திருந்தாலும், இன்னும் அரசியல் ரீதியாக ஒருங்கிணையவில்லை என்ற கருத்து நிலவுகிறது. இருந்தாலும் மதுரையின் நகர்ப்பகுதிகளில் செளராஷ்டிரா மக்கள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக சில தொகுதிகளில் இருக்கின்றனர். குறிப்பாக திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இதன் காரணமாகவே காசி தமிழ்ச் சங்கத்திற்கு மதுரையில் இருந்து அதிகளவிலான செளராஷ்டிரா மக்களை பாஜக அனுப்பி வைத்தது. அதேபோல் மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனும் செளராஷ்டிரா மக்களை புகழ்ந்து பேசி வந்தார். மதுரை தெற்கு தொகுதியில் மட்டும் சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான செளராஷ்டிரா வாக்காளர்கள் இருக்கின்றனர்.
இவர்களுடன் அதிமுக நிர்வாகிகளின் ஆதரவு கிடைத்தால் நாம் வெற்றிபெறலாம் என்று ராம சீனிவாசன் கணித்து தேர்தலில் களமிறங்கி இருக்கிறார். ஆனால் மதுரை தெற்கு தொகுதியில் ராம சீனிவாசனுக்கு தவெக மற்றும் நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகளும் மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.
ஏனென்றால் தவெக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கோபிசன் செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கு செளராஷ்டிரா சமூக மக்களின் ஆதரவு கணிசமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் ராம சீனிவாசன் தெலுங்கு ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். செளராஷ்டிரா நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தாலும், தேர்தலில் பலரும் விஜய் பக்கம் சாய்வார்கள் என்று தெரிகிறது.
இதனால் ராம சீனிவாசனுக்கு முக்குலத்தோர் மக்களின் ஆதரவும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவும் கட்டாயமாக தேவைப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ்க்கு செல்வாக்கு இருப்பதால், அவர்கள் திமுக கூட்டணி பக்கம் சாயவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோல் மதுரை கிழக்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு தொகுதிகளிலும் செளராஷ்டிரா வாக்குகளை விஜய் அதிகமாக கைப்பற்றுகிறார்.
குறிப்பாக செளராஷ்டிரா இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளை விஜய் மொத்தமாகவே அள்ளுகிறார். 35 வயதிற்கு மேற்பட்டவர்களின் வாக்குகள் மட்டுமே அதிமுக - பாஜக கூட்டணிக்கு கிடைக்கிறது. இதனால் மதுரையில் விஜய்யால் மிகப்பெரிய பிரச்சனையை அதிமுக - பாஜக கூட்டணி சந்திக்கும் என்று களத்தில் இருக்கும் பலரும் பேசத் தொடங்கியுள்ளனர்.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications