என்ட்ரி கொடுத்த மேலிட பொறுப்பாளர்.. பாஜக மாநில தலைவர் மாற்றமா? “1+1 = ?” குஷ்பு சொன்ன கணக்கு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாடு பாஜக தலைவரை தேர்வு செய்வதற்கான பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு ஒரு கணக்கைச் சொல்லியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் மதுரை தொடங்கி சென்னை வரை பேரணி நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மதுரையில் தொடங்கிய பேரணியில் பாஜகவினர் பங்கேற்றுள்ளனர்.

khushbu bjp annamalai

குஷ்பு கைது

தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு பேசுகையில், "இந்த பேரணிக்கு அனுமதி கொடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. திமுக ஆட்சிக்கு எதிராக, திமுகவின் தவறான செயல்களை எதிர்த்து யார் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் எங்களுக்கு எங்குமே அனுமதி கொடுக்கப்படுவதில்லை. தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்குவது, கைது செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது.

கண்ணகி பிறந்த மண்ணில்

என் மண்ணில், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை இன்று மக்கள் காது கொடுத்துக் கேட்கிறார்கள். நாங்கள் சொல்வதை கேட்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது முதல் பிரச்சனை கிடையாது. மணிப்பூரில் எல்லை மீறி பிரச்சனை நடக்கிறது. மணிப்பூரில் நடந்த பிரச்சனை பற்றி தெரியாமல் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பேசுகிறார்கள். மணிப்பூரில் என்ன நடக்கிறது என தெரியாமல் அதோடு இதை ஒப்பிட்டு பேசுபவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது.

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத திமுக, பெண்கள் பாதுகாப்பு மையம் திறக்கிறது. முதலில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெண்களுக்கு ஆண்களால் கொடுமை நடந்தால், அது எந்த மாநிலத்தில் நடந்தாலும் குரல் கொடுப்போம். இந்த சாதி, இந்த மதம் என எதையும் சம்பந்தப்படுத்தி பார்க்கக்கூடாது. பெண்ணுக்கு எதிரான செயலாக தான் பார்க்க வேண்டும், அங்கு அரசியல் செய்யக்கூடாது." எனத் தெரிவித்தார்.

மாநில தலைவர் மாற்றம்? - குஷ்பு கணக்கு

அப்போது செய்தியாளர்கள், தமிழக பாஜக தலைவரை மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதா? பாஜக மாநிலத் தலைவர்கள், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான தமிழகத்திற்கான பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளாரே எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த குஷ்பு, "1+1 எப்போதும் 2 தான். 1+1 = 11 என யாருமே முடிவுக்கு வந்துவிடாதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

நான் சொல்ல முடியாது

மேலும், தவெக தலைவர் விஜய் உடன் பாஜக இணைவதற்கான வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த குஷ்பு, "யாருக்குத் தெரியும். இதற்கு டெல்லி மேலிடமும், மாநில தலைவரும் தான் பதில் சொல்ல வேண்டும். நான் சொல்ல முடியாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+