Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீகாந்த் பாவம்.. தெரியாமல் சிக்கிக் கொண்டார்.. பிரபலங்கள் பலரும் பயன்படுத்துகின்றனர் - சீமான் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் ரொம்ப பாவம் என்றும், இந்த வழக்கில் தெரியாமல் சிக்கிக் கொண்டதாகவும், திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் பயன்படுத்தியதாக நுங்கம்பாக்கம் போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Drugs Srikanth Seeman

ஏற்கனவே போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரசாத் என்பவரே நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் விநியோகம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. 250 கிராம் கொகைன் போதைப்பொருளை வழங்கியுள்ளார். பிரசாத் தயாரிக்கும் தீக்கிரை படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்து வந்தார். இதில் ஸ்ரீகாந்துக்கு சம்பள பாக்கியாக ரூ. 10 லட்சம் தர வேண்டியிருந்துள்ளது. இந்தப் பணத்தை கேட்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் ரொம்ப பாவம் என்றும், இந்த வழக்கில் தெரியாமல் சிக்கிக் கொண்டதாகவும், திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முருகனை தொட்டதே ஒரு அரசியல் தான். ஆன்மிகம், முருகன் மாநாடு, பக்தர்கள் மாநாடு என கூறினால் அரசியல் இல்லையா. பாஜகவுக்கு மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் திடீரென முருகப்பெருமான் மீது அக்கறை வந்துள்ளது. தேர்தல் நடைபெறவுள்ளதால் முருகன் மாநாட்டை நடத்தியுள்ளனர். ஆண்டுதோறும் இதுபோன்று மாநாட்டை நடத்துவார்களா.. தேர்தலில் வாக்கு வரவில்லை என்றால் நடத்தமாட்டார்கள். அடுத்தாண்டு மாநாடு போடட்டும் அரசியலா, இல்லையா என பார்ப்போம்.

விவசாயிகளின் குறைகளை ஆட்சியாளர்கள் என்றும் கேட்டது கிடையாது. ஆடு, மாடு உள்ளிட்ட அனைத்து கால்நடைகளும் எங்களுடைய பண்பாடு, செல்வம், உடன்பிறந்தவர்கள். அவற்றை வளர்ப்பது தொழில் இல்லை. எங்களின் வாழ்க்கை முறை, விவசாயத்தின் நீட்சி. கால்நடைகளுக்கு பேசும் திறன் இல்லை என்பதால் அவற்றுக்காக நான் பேசுகிறேன். அதற்காகவே ஜூலை 10 ஆம் தேதி மதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடு, மாடுகள் மாநாடு நடைபெறவுள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்தை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் ரொம்ப பாவம் என்பது என் கருத்து. திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர். சினிமாவில் புகழ் பெற்றவர்கள் கூட போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர்.

ஸ்ரீகாந்த் தெரியாமல் இந்த வழக்கில் சிக்கிக் கொண்டார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். அதிகாரங்களுக்கு, ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் இந்த போதைப்பொருள் புழக்கத்தில் வராது. திரையுலகில் மட்டுமல்ல, கல்லூரி, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்களில் கூட கஞ்சா, கொகைன், அபின் போன்ற போதைப்பொருட்கள் நீண்ட நாட்களாக விற்கப்படுகின்றன. அரசு நினைத்தால், போதைப்பொருள் ஒழிக்கப்படும். ஸ்ரீகாந்த் புகழ் பெற்ற நடிகர் என்பதால் இந்த செய்தி வெளியாகி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடிகர் கைதானதால், போதைப்பொருள் ஒழிந்துவிடப் போகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. கூட்டணி தொடர்பாக பொறுமையாக இருங்கள். பதில் அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+