ஸ்டாலின், உதயநிதி திமுகவை விட்டு வெளியேற வேண்டும்.. அமைச்சர் நிர்மல்குமார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. ஆட்சியை இழந்து, கூட்டணி உடைந்ததால் தவெக மற்றும் கூட்டணி கட்சியினர் மீது திமுக கோபத்தில் உள்ளது. இந்நிலையில் திமுகவின் குடும்ப ஆட்சி ஆதிக்கத்தால் தான் மக்கள் அவர்களை புறக்கணித்தார்கள். 70 வயதிற்கு மேற்பட்டோரை பதவி நீக்கம் செய்தால் அது மாறாது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

மதுரையில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "எதற்கு திமுகவை ஓட ஓட விரட்டினார்கள். மக்கள் எதற்கு திமுகவுக்கு ஓட்டு போடவில்லை என்பது அவர்களுக்கு புரியவில்லை. இளைஞர்களை பதவியில் நியமித்தால் மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டுவிடுவார்களாம். அதனால் 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு பதவியில்லை என்று கூறியுள்ளனர். மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மன்னராட்சி மனநிலையில் ஒரு குடும்பமாக மக்களை ஏமாற்றுகிறீர்கள்.

Nirmalkumar

மன்னராட்சி இல்லை

கோபாலபுர குடும்பம் இன்றைக்கு ஸ்டாலின் குடும்பமாக மாறி அடுத்த தலைமுறைக்கு சென்றுள்ளது. இந்த நாடு உங்களுக்கு எழுதி கொடுக்கப்பட்டுள்ளதா. ஒரு குடும்பம் சம்பாதித்து 3-4 தலைமுறையாக மக்களை ஏமாற்றி கொண்டிருந்தீர்கள். அதனால் தான் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள். மக்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு தெரியவில்லை. மக்களிடம் நன்மதிப்பு ஏற்பட வேண்டுமென்றால் ஸ்டாலின், உதயநிதி எல்லாம் கட்சியை விட்டு வெளியேற வேண்டும்.

கட்சிக்குள் ஜனநாயகத்தை கொண்டு வாருங்கள். அப்போதுதான் நம்பிக்கை ஏற்படும். மாப்பிள்ளையின் நண்பர்கள், பையனின் நண்பர்கள் என்று ஒரு 20 பேர் உட்கார்ந்து கொண்டு ஆட்சி செய்கிறார்கள். தமிழகத்தை ஆட்சி செய்ய மாப்பிள்ளைக்கும், பையனுக்கும் என்ன அதிகாரம் இருக்கிறது. நாம் வழக்கு போட்டவுடன் அவர்களுடன் இருந்த நண்பர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டனர். இவர்களுக்கு அரசியலும் தெரியாது.

கோடிக்கணக்கில் கொள்ளை

கட்சி, மக்கள் எதுவும் தெரியாது. கூட சுற்றி கொண்டிருந்தவர்கள் எல்லாம் அரசை இயக்கி வந்தனர். மக்களையே தெரியாதவர்கள் 5 வருடங்கள் ஆட்சி செய்தனர். 70 வயதிற்கு மேற்பட்டோரை வீட்டிற்கு அனுப்பினால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள. குடும்ப ஆதிக்கத்தில் இருந்து வெளியே அனுப்புங்கள். நீங்கள் மன்னர்கள் இல்லை. இது மக்களாட்சி. அண்ணா கஷ்டப்பட்டு திமுகவை தொடங்கினார். இதை வைத்து லட்சக்கணக்கான கோடியை கொள்ளையடித்துள்ளீர்கள்.

மக்கள் இன்றைக்கு முதலமைச்சர் விஜயை புரிந்துள்ளனர். விஜயும் மக்களை புரிந்துள்ளார். ஒரு ரூபாய் கூட தவறு செய்ய கூடாது என்று சொல்லியுள்ளார். அதனால் தான் எல்லாரும் பயந்து பயந்து வேலை செய்கிறார்கள். திமுக அமைச்சர்கள் எல்லாம் வியாபாரம் செய்தனர். நாங்கள் மக்களுக்காக பணியாற்றுகிறோம். இது மக்கள் எங்களுக்கு கொடுத்துள்ள விஷயம். நாங்கள் சம்பாதிப்பதற்கு வரவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+