ஸ்டாலின் விரைவில் முதல்வராவார்.. அடித்து சொல்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Vaiko Campaign: தமிழக அரசுக்கு முடிவு கட்ட வந்துள்ளேன்- வைகோ பிரச்சாரம்- வீடியோ
மதுரை: திமுக தலைவர் முக ஸ்டாலின் விரைவில் முதல்வராவார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தி.மு.க., வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக அவனியாபுரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, வைப்பு நிதி, ஆம்னிபஸ் வாங்கியது, துணைவேந்தர் நியமனம், டெண்டர் ஊழல்களால் தமிழக அரசு, மத்திய அரசுக்கு அடிபணிந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.
குழந்தைகள் விற்பனை செய்யப்படுகின்றனர். 22 சட்டசபை இடைத்தேர்தல்களிலும் தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி. விரைவில் ஸ்டாலின் முதல்வராவார், இவ்வாறு வைகோ பிரச்சார கூட்டத்தில் பேசினார்.












Click it and Unblock the Notifications