10,000 பாடல்கள் பாடிய இசைக்கடல் டி.எம்.சௌந்தரராஜன்! மதுரையில் காண்போரை வியக்க வைக்கும் கம்பீர சிலை!
மதுரை: ஏழிசை மன்னர், இசைக்கடல் உள்ளிட்ட அடைமொழிகளுக்கு சொந்தக்காரரான மறைந்த டி.எம்.சௌந்தரராஜனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் பிறந்த ஊரான மதுரையில் கம்பீர சிலை நிறுவி அதனை திறந்து வைக்கிறர் முதலமைச்சர் ஸ்டாலின்.
பிறந்த ஊருக்கு புகழை சேர்த்த டி.எம்.சௌந்தரராஜனுக்கு, அதே ஊரில் சிலை நிறுவி காலத்தால் அழியாத புகழை சேர்த்திருக்கிறது தமிழக அரசு.

தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் 1923 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசை ஞானத்தை வளர்த்தார்.
தமிழ்த் திரையுலகில் 1950 ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் "ராதை நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடல்தான் அவர் குரலில் ஒலித்த முதல் பாடல் ஆகும். அன்று முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் அசைக்க முடியாத பாடகராகத் திகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, திரையுலகில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களில் இடம் பிடித்தார்.
குரல் வளம், இசை ஞானம் மூலம் தனித்துவமான பாடல்களை பாடி திரையிசை வரலாற்றில் முத்திரைப் பதித்தவர் டி.எம்.சௌந்தரராஜன். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோருக்கு பல எண்ணற்ற பாடல்களை பாடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கருணாநிதியால் 1970 ஆம் ஆண்டு "ஏழிசை மன்னர்" என்ற பட்டம் டி.எம்.சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது.
மேலும், 1969 ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசனால் "இசைக் கடல்" என்று போற்றப்பட்டார். 2003 ஆம் ஆண்டு டி.எம்.சௌந்தரராஜனுக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.
தனது குரல் வளத்தால் மக்களின் எண்ணங்களில் நீங்காமல் இருந்த டி.எம்.சௌந்தரராஜன் 2013 ஆம் ஆண்டு மே 25 அன்று மறைந்தார். மறைந்தும், அவர் பாடிய பாடல்கள் மூலம் வாழ்கின்ற பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில் இன்று மதுரையில் சிலை திறக்கப்பட்டு சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications