தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில்.. இந்து கடவுள் தன்வந்திரியின் படம்! சு.வெங்கடேசன் எம்பி சாடல்
மதுரை: சமீபத்தில் உயிரியல் படிக்காதவர்களும் எம்பிபிஎஸ் படிப்பில் சேரலாம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறியிருந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது ஆணையத்தின் லோகோவில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுளான 'தன்வந்திரியின்' படம் வைக்கப்பட்டிருப்பது புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
ஒரு வாரத்திற்கு முன்னர் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான 'நீட்' தகுதித் தேர்வு தொடர்பாக முக்கியமான அறிவிப்பை மருத்துவ ஆணையம் வெளியிட்டிருந்தது. அதாவது மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வில் பங்கேற்க வேண்டும் எனில் 11 மற்றும் 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் ஆகிய பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும் என்கிற விதி ஒரு வாரத்திற்கு முன்பு வரை இருந்தது. ஆனால் இனி உயிரியல் படிக்காதவர்களும் எம்பிபிஎஸ் படிப்பில் சேரலாம் என மருத்துவ ஆணையம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, மருத்துவ படிப்புக்கு தேவையான இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கூடுதல் பாடமாக படித்தவர்களும் இனி இளநிலை நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று கூறியிருந்தது. நீட் தேர்வெழுத கூடுதலாக உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்ப பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மத்திய அல்லது மாநில தேர்வு வாரியத்தின் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் கூறியிருந்தது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் லட்சிணையில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுள் தன்வந்திரி படம் வைக்கப்பட்டுள்ளது.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 30, 2023
மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது.
நவீன மருத்துவத்தை
மறுதலிக்க முனைவது
அறிவியலோடு விளையாடுவது மட்டுமல்ல… மக்களின் உயிரோடு விளையாடுவது. pic.twitter.com/4WGnWVGYVn
இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவாதம் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுள் தன்வந்திரியின் படம் வைக்கப்பட்டிருப்பது புதிய சலசலப்பை கிளப்பியிருக்கிறது. இந்து மத புராணங்களில் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் தன்வந்திரி, தேவர்களின் மருத்துவர் என்றும், ஆயுர்வேதத்தின் கடவுள் என்றும் குறிப்பிடப்படுகிறார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, "மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது. நவீன மருத்துவத்தை மறுதலிக்க முனைவது அறிவியலோடு விளையாடுவது மட்டுமல்ல... மக்களின் உயிரோடு விளையாடுவது" என்று சாடியுள்ளார்.
மருத்துவர்கள் பலரும், "மருத்துவம் மதச்சார்பற்றது. நோயாளிகளை எந்த மருத்துவரும் மதங்களால் பாகுபடுத்தி பார்ப்பதில்லை. இப்படி இருக்கும்போது இந்து கடவுளின் உருவத்தை லோகோவாக வைப்பது என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் உயர்த்தி பிடிப்பதை போல இருக்கிறது" என்று விமர்சித்துள்ளனர். சோஷியல் மீடியாக்களில் இது குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications