Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல..வன்மம்.. தீராத வன்மம்.. சு வெங்கடேசன் பதிவால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: கர்நாடகா மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 3454 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழகத்திற்கு மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே வழங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை மதுரை சிட்டிங் எம்பியும், திமுக கூட்டணி லோக்சபா வேட்பாளருமான சு வெங்கடேசன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால், கடுமையான வறட்சி நிலவுகிறது. மக்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெங்களூர் நகரில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

Su Venkatesan MP s review on central government s relief funds for Tamil Nadu and Karnataka

இதையடுத்து கர்நாடகா அரசு மாநிலத்தில் மழை பெய்யாததால் வறட்சி நிலவுவதாகவும், பயிர்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், ரூ.18 ஆயிரம் கோடி ,நிவாரண நிதி வழங்க கோரி மத்திய அரசுக்கு எழுதியது. இதையடுத்து 10 அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் கர்நாடகத்திற்கு வருகை தந்து வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தி சென்றார்கள். மத்திய நிபுணர்கள் குழுவினர் கர்நாடகத்தில் நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி இருந்தார்கள்.

ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை கர்நாடகத்திற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனால் வறட்சி நிவாரண நிதியை கர்நாடகத்திற்கு வழங்கும்படி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக 32-வது சட்ட விதிகளின்படி கர்நாடக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழு (IMCT) அறிக்கையைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் NDRF உதவியை வழங்குவது குறித்து மத்திய அரசு இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது.

இதனிடையே மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தை அணுகுவதற்குப் பதிலாக, மாநிலத்தைச் சேர்ந்த யாராவது மத்திய அரசிடம் பேசி இருந்தால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்று கூறினார்.

இதனிடையே நிதி வழங்குவது தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக நிவாரணம் கோரி பல மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி வருவதாக நீதிமன்றம் கவலையை வெளிப்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. முன்னாக பேரிடர் மேலாண்மைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் கூறி தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதேபோல் கேரள அரசும், மத்திய அரசு கடன் வாங்கும் வரம்பை குறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

Su Venkatesan MP s review on central government s relief funds for Tamil Nadu and Karnataka

இப்படி அடுத்தடுத்து வழக்குகள் வந்த நிலையில், மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மத்தியில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்று, கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளது. இதன்படி 18000 கோடி ரூபாய் கேட்ட, கர்நாடகா மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 3454 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது மத்திய அரசு. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக 38000 கோடி ரூபாய் கேட்ட தமிழக அரசுக்கு 275 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கி உள்ளது. அதாவது இருமாநிலங்களுக்கும் சேர்த்து 3730 கோடியே 32 லட்சம்ட ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் மதுரை எம்பியுமான சு வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடியாகும். பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல... வன்மம்.. தீராத வன்மம்." இவ்வாறு மத்திய அரசை வெங்கடேசன் எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+