ஆட்டத்திலேயே இல்லாத பாஜக.. சு வெங்கடேசன் VS சரவணன்.. மதுரையில் வெல்வது யார்? தந்தி டிவி சர்வே முடிவு
மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் பாஜக ஆட்டத்திலேயே இல்லை எனவும், போட்டி என்பது திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு வெங்கடேசன், அதிமுக வேட்பாளர் சரவணன் இடையே தான் உள்ளதாகவும், இதில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? என்பது பற்றி தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. வேட்பாளர்கள், தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் தான் தமிழக லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி சார்பில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. . இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
அதன்படி மதுரை தொகுதி நிலவரம் என்ன? என்பதை இங்கு பார்ப்போம். மதுரை தொகுதியில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு வெங்கடேசன் எம்பியாக உள்ளார். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இந்த முறையும் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் சு வெங்கடேசன் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சரவணன், பாஜகவில் ராம சீனிவாசன், நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதன்படி இந்த தேர்தலில் மீண்டும் சு வெங்கடேசன் வெற்றி பெறுவார் என தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சு வெங்கடேசனுக்கு திமுக கூட்டணியில் இருப்பது பெரிய பிளஸ் பாயிண்டாக உள்ளது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 40 முதல் 46 சதவீத ஓட்டுகளை பெற்று சு வெங்கடேஷன் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் 2வது இடத்தை அதிமுக வேட்பாளர் சரவணன் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக வேட்பாளர் சரவணன் 34 முதல் 40 சதவீத ஓட்டுகளை பெறுவார் என கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாஜக மதுரையில் 3வது இடத்தை தான் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் 12 முதல் 18 சதவீத ஓட்டுகளை மட்டுமே அறுவடை செய்வார் என தந்திடிவி கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யா தேவி 4 முதல் 7 சதவீத ஓட்டுகளை பெறுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. மற்றவர்கள் 1 முதல் 3 சதவீதம் வரை பெறும் என தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications