குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு?
மதுரை: என்டிஏ கூட்டணி சார்பாக மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் அவரின் மனைவி குஷ்புவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வேட்புமனு மூலமாக வெளியாகி இருக்கிறது. அதன்படி குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கமும், 24.3 கிலோ வெளியும் இருக்கின்றன. சுந்தர்.சி பெயரில் 3 கார்களும், குஷ்பு பெயரில் ஒரு காரும் இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பாக மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளராக சுந்தர்.சி அறிவிக்கப்பட்டிருக்கிறார். என்டிஏ கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து புதிய தமிழகம் கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் சுந்தர்.சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஏனென்றால் பாஜக சார்பாக குஷ்புவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏசி சண்முகம் தயாரிக்கும் படங்களை தொடர்ச்சியாக இயக்கி வந்த சுந்தர்.சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுரை வந்த சுந்தர்.சி உடனடியாக அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளை சந்தித்தார்.
தற்போது தேர்தல் பணிகளை தொடங்கிய சுந்தர்.சி, இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது நடிகையும், மனைவியுமான குஷ்பு மற்றும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிலையில் சுந்தர்.சி வேட்புமனுவில் அவரின் சொத்து மதிப்பும், குஷ்பு பெயரில் உள்ள சொத்து மதிப்பும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி மனைவி குஷ்புவிடம் ரூ.4.80 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுந்தர்.சி வசம் 220 கிராம் தங்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அசையும் சொத்துக்களாக ரூ.28 லட்சம் மதிப்பில் டொயோட்டா கார், ரூ.12.80 லட்சம் மதிப்பில் கியா சோனட் மற்றும் கார்னிவல் கார் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதேபோல் குஷ்பு பெயரில் ரூ.33 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் உள்ளது. இதன் மூலமாக குஷ்புவிடம் ரூ.6.06 கோடிக்கும், சுந்தர்.சி-யிடம் ரூ.2.97 கோடிக்கும் அசையும் சொத்துகள் உள்ளன. அதேபோல் அசையா சொத்துகளாக சுந்தர்.சி-க்கு ரூ.4 கோடிக்கு நிலம் இருப்பதாகவும், குஷ்பு பெயரில் ரூ.2.74 கோடி அளவிற்கு அசையா சொத்துகள் இருப்பதாகவும் தெரிகிறது.
மொத்தமாக சுந்தர்.சி பெயரில் ரூ.2.97 கோடி அசையும் மற்றும் ரூ.17.7 கோடி அசையா சொத்துகள் உள்ளன. அதேபோல் குஷ்பு பெயரில் ரூ.6 கோடி அசையும் சொத்துகளும், ரூ.4.17 கோடி அசையா சொத்துகளும் உள்ளன. சுமார் 30 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் சுந்தர்.சி மற்றும் குஷ்பு இருவரின் சொத்து மதிப்பு மக்களிடையே விவாதமாகி இருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications