Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சர்ப்ரைஸ்" தந்துட்டாரே இறையன்பு.. மோடி தோளின்மீது அதானி.. அதுவும் இரண்டரை மணி நேரம்: சு.வெங்கடேசன்

இறையன்புவின் எளிமை குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: "நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஒன்றரை மணி நேரம், மாநிலங்களவையில் ஒரு மணி நேரம், உலகின் 3 வது பெரும்பணக்காரரை ஒரு மனுஷன் தனது தோளில் தூக்கி கொண்டு நின்றார்... நிற்கிறார்..." என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேசிய பேச்சு ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.. என்ன காரணம்?
ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பற்றிய மோசடிகளை வெளியிட்டதில் இருந்தே, தேசிய அரசியல் தகிக்க தொடங்கி உள்ளது.. எதிர்க்கட்சிகள் விடாமல் கேள்விகளை எழுப்ப, பாஜகவோ பதிலளிக்க முடியாமல் திணறி வருவதாக தெரிகிறது..

இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பு விசாரணை நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.. இது தொடர்பான அமளி காரணமாக நடப்புக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன..

 பொங்கும் மகிழ்ச்சி

பொங்கும் மகிழ்ச்சி

பல்வேறு கட்சிகள் அதானி குறித்து கேள்விகளை எழுப்பியபடியே உள்ளனர்.. அதில், மதுரை எம்பி வெங்கடேசனும் ஒருவர்.. எந்த விவகாரம் என்றாலும், அதில் அதானியை உள்ளே கொண்டு வந்து நுழைத்து, பாஜகவை கேள்வி எழுப்பிவருகிறார்.. காதலர் தினத்தை, பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாகக் கொண்டாடுமாறு விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடப்பட்டபோது, இதையும் வந்து விமர்சித்திருந்தார் வெங்கடேசன்.."இந்தியாவில் மகிழ்ச்சி பொங்க" இரண்டு வழிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதானியை மோடி அணைப்பார். மக்கள் பசுவை அணைக்க வேண்டும். இதுவல்லவோ அரசு? என்று கிண்டலடித்திருந்தார்..

கருணாநிதி

கருணாநிதி

அதுபோலவே, அவையில் பிரதமர் மோடி பேசும்போது, "நேரு சிறந்த மனிதர் எனில் அவரது குடும்பத்தினர் நேருவின் பெயரை ஏன் குடும்பப் பெயராக வைக்கவில்லை. நேருவின் பெயரை குடும்பப் பெயராக வைத்துக் கொள்வதால் என்ன அவமானம் ஏற்படப் போகிறது என்று கேட்டிருந்தார்.. இதற்கும் ட்வீட் போட்டு விமர்சித்திருந்தார் வெங்கடேசன்.. அதில், "காந்தி, நேரு, எம் ஜி ஆர், என்டிஆர், கருணாநிதி ஆகியோரைப் பற்றி இரு அவைகளிலும் கேள்வி எழவில்லை. ஆனால் அவர்களைப்பற்றிப் பேசினார் பிரதமர். எல்லோரும் எழுப்பியது அதானியைப் பற்றிய கேள்வி. ஆனால் அதற்கு வாய்த்திறக்கவில்லை. நட்பின் இலக்கணத்தை நாட்டுக்குக் கற்றுக்கொடுத்தார் பிரதமர்" என்று பதிவிட்டிருந்தார்.

 மதுக்கூர் ராமலிங்கம்

மதுக்கூர் ராமலிங்கம்

இந்நிலையில், தமிழக தலைமை செயலர் இறையன்புவை பாராட்டி உள்ளார் வெங்கடேசன்.. ஆனால், இதிலும் அதானியையும், பிரதமரையும் ஒப்பிட்டே தன் கருத்தை சொல்லி உள்ளார்.. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலை இலக்கிய விருதுகள் வழங்கும் விழா தூத்துக்குடியில் நடந்தது. இவ்விழாவில், தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, தமுஎகச தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் மதுரை வெங்கடேசன் பேசியதாவது:

 இதுதானே மனிதம்?

இதுதானே மனிதம்?

"வேலூர் மாவட்டத்தில் ஆய்வு பணிகளுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ரயில் மூலம் அங்கு சென்றார்... அதே ரயிலில், தமிழக தலைமை செயலர் வெ.இறையன்பு பயணித்தார்.. ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியபோது தன்னுடைய உடமைகள் அடங்கிய 2 பெட்டிகளையும் அவரே சுமந்து கொண்டு சென்றார். இது சம்பந்தமான போட்டோக்கள் பத்திரிகைகள், சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டது... எவ்வளவு உயரம், எவ்வளவு அதிகாரத்தில் இருந்தாலும் அடிப்படையில் மனிதன் தானே என்ற கருத்து அது? இந்த சந்தோஷத்துடன்தான் நான் டெல்லி சென்றேன்.. ஆனால், அங்கு நான் பார்த்த காட்சி இறையன்பு மீதிருந்த வியப்பை உடைத்தே விட்டது..

 தோளில் மனுஷன்

தோளில் மனுஷன்

காரணம், நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஒன்றரை மணி நேரம், மாநிலங்களவையில் ஒரு மணி நேரம், உலகின் 3 வது பெரும்பணக்காரரை ஒரு மனுஷன் தனது தோளில் தூக்கி கொண்டு நின்றார்... நிற்கிறார்... உலகின் மூன்றாவது பெரும் பணக்காரரை இரண்டரை மணி நேரம் ஒரு மனிதன் தனது தோளில் தூக்கி போட்டு பேசுகிறார்... தோளில் இருந்தது அதானி.. அவரை தூக்கி வைத்தது மோடி" என்றார் வெங்கடேசன்.. மதுரை எம்பியின் இந்த பேச்சுதான் இணையத்தில் வீடியோவாக தற்போது வைரலாகி வருகிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+