மதுரைவாசிகளே.. தெற்கு ரயில்வேயின் பிக் அறிவிப்பு.. ஹேப்பி நியூஸ் வந்துடுச்சு.. இன்று முதல் அதிரடி..!!
மதுரை: கோயில் நகரமான மதுரைக்கு ஸ்பெஷல் செய்தி ஒன்றை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.. இது மதுரைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
மதுரைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகின்றது. அந்தவகையில், இப்போது மேலும், ஒரு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு இந்த சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. ரயில் புறப்படும் நேரம், தேதி உள்ளிட்ட முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இன்று அதாவது ஏப்ரல் 17ம் தேதி முதல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி வழியாக மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் தொடங்கப்படும் சிறப்பு கட்டண ரயில் சேவை, வரும் 24, மே மாதம் 1 மற்றும் 8-ம் தேதி, ஜூன் மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தேதிகளில் காச்சிகுடாவில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், அடுத்த நாள் காலையில் 8.45 மணிக்கு மதுரையை வந்தடையும்.
இதேபோல், மதுரையில் இருந்து காச்சிக்குடாவுக்கு வரும் 19, 26 ஆகிய தேதிகளிலும், மே மாதம் 3,10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.மதுரையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அடுத்த நாள் காலை 7.05 மணிக்கு காச்சிகுடா ரயில் நிலையம் செல்கிறது.

இந்த ரயில், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கட்டண ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.தெலங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு மதுரைவாசிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், சிறப்பு கட்டண ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த சிறப்பு கட்டண ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி முன்னதாகவே நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயின் இந்த புதிய ரயில் சேவை மதுரை வாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications