தமிழ்நாடு பாஜக மாநில செயலாளரையே தட்டி தூக்கிய போலீஸ்! எஸ்ஜி சூர்யா கைது.. இரவில் பரபரப்பு
மதுரை: தமிழ்நாடு பாஜக மாநி செயலாளர் எஸ்ஜி சூர்யாவை மதுரை போலீசார் நேற்று நள்ளிரவில் சென்னையில் வைத்து அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளராக இருப்பவர் எஸ்ஜி சூர்யா. மாநில தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். இவர் அண்ணாமலையுடன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் கூட செய்துள்ளார்.
எஸ்ஜி சூர்யா, சென்னையை சேர்ந்தவர். இந்நிலையில் தான் எஸ்ஜி சூர்யாவை மதுரை மாநகர போலீசார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னையில் வைத்து நேற்று இரவு 11 மணியளவில் எஸ்ஜி சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தான் அவர் கைது செய்யப்பட்டதன் பின்னணி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது எஸ்ஜி சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரை எம்பியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதுதொடர்பாக எஸ்ஜி சூர்யா அவதூறு பரப்புவதாக எம்பி வெங்கடேசன் சார்பில் மதுரை மாநகர போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் எஸ்ஜி சூர்யாவை நேற்று இரவு கைது செய்தனர். சென்னை திநகரில் உள்ள எஸ்ஜி சூர்யா வீட்டிற்கு நேற்று இரவு சென்ற மதுரை போலீசார் அவரை அங்குவைத்து கைது செய்தனர். அதன்பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு மதுரை அழைத்து சென்றனர்.
இதற்கிடையே எஸ்ஜி சூர்யா கைது செய்யப்பட்டு இருப்பதை கண்டித்து நேற்று இரவு பாஜகவினர் சென்னையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்ளிடம் பேசி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையே எஸ்ஜி சூர்யாவின் கைது நடவடிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள் பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எஸ்ஜி சூர்யா, தென்சென்னை தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் சமீபகாலமாக அவர் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தான் சு வெங்கடேசன் தொடர்பாக அவர் கூறிய கருத்துக்கு மதுரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications