மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ஆட்டோவை ரிசர்வ் செய்ய போட்டா போட்டி! Auto ஓனர் காட்டில் மழை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, பிரச்சார பீரங்கியான ஆட்டோவில் விளம்பரம் செய்வதற்கான கிராக்கி அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம். அதிலும் மதுரையில் போட்டி போட்டுக் கொண்டு பலர் ஆட்டோக்களை புக் செய்கிறார்களாம்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இதனால் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி விவகாரத்தில் மும்முரமாக இருக்கின்றன. அதே வேளையில் மக்களிடம் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகின்றன.

madurai tamil nadu assembly election 2026 2026

ஒரு பக்கம் தலைவர்கள் பொதுக் கூட்டம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, மாநாடுகளில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கட்சியின் மறுபக்கம் நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதிலும் ஆட்டோ பிரச்சாரம் அண்மைக்காலமாக பிரபலமாகி வருகிறது.

தெரு தெருவாக ஆட்டோவில் இருந்து குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க கோரி நோட்டீஸ் வழங்குவது, மைக்கில் "உங்கள் வாக்கு, எங்கள் சின்னத்திற்கே", உங்கள் பொன்னான வாக்குகளை இந்த சின்னத்திற்கே அளியுங்கள்" உள்ளிட்ட விளம்பரங்கள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக மதுரையில் ஆட்டோக்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது மதுரை புறநகரில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் வரை இருக்கிறதாம். அதன் பின்புறம் விளம்பரம் செய்ய மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேர்தல் காலத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த ஆட்டோக்கள், சந்து பொந்துகளில் நுழைந்து விளம்பரம் செய்யும். அத்துடன் அதில் பிளக்ஸ் பேனர் பொருத்தி, ஆளும் கட்சியின் சாதனைகள், ஆளும் கட்சியின் நிர்வாக சீர்கேடு, எதிர்க்கட்சியின் கடந்த கால பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்வது வழக்கம்.

இதனால் இந்த மொபைல் ஆட்டோ விளம்பரம் கட்சிகளுக்கு உதவியாகவே இருக்கும். இதனால் இந்த ஆட்டோக்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கவில்லை, வேட்பாளரும் யாரென்று தெரியாது, ஆனாலும் முதல் கட்டமாக கட்சியின் வாக்குறுதிகளை வைத்தாவது ஆட்டோக்களில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகள் போட்டி போட்டு கொண்டு ஆட்டோவை புக் செய்கிறார்களாம். அதற்காக இப்போதே ரிசர்வ் செய்து வருகிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன.

மதுரையில் ஆட்டோ பின்புற விளம்பரத்திற்கு மாதாந்திரம் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை செலவாகும். இது பிரச்சார அளவு, கால அளவு, ஆட்டோ எண்ணிக்கை, டிசைன் சிக்கல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். ஒரு ஆட்டோவுக்கு ஹூட் அல்லது பேக் பேனல் ஸ்டிக்கர் விளம்பரத்திற்கு ரூ.550 முதல் ரூ.900 வரை தினசரி அல்லது மாதாந்திர அடிப்படை விகிதம் உள்ளது.

சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழக நகரங்களில் 50-100 ஆட்டோக்களைப் பயன்படுத்தினால் மாதம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை செலவு ஏற்படலாம். தேர்தல் காலத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் விலை 20-50% உயரலாம்.

வேட்பாளருக்கு மொத்த தேர்தல் செலவு ரூ.40 லட்சம் வரை அனுமதி. அதை மீறினால் ஊழல் எனக் கருதப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை. ஆட்டோ பிரச்சாரம் செலவுகளை கண்காணிக்கும் குழுக்கள் செயல்படும்.

வெயில் நேரத்தில் பிரச்சாரம் செய்ய நேரிடும் என்பதால் ஓட்டு கேட்க உடன் வரும் தொண்டர்களுக்கு கூல் டிரிங்க்ஸ் பாக்கெட், மோர் உள்ளிட்டவை வாங்கி கொடுக்க கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனராம். இதை அறிந்த குளிர்பான நிறுவனங்கள், "கட்சி நிர்வாகிகளை அணுகி, குளிர்பான பாக்கெட்டுகளில் கட்சி சின்னத்தை அச்சடித்து தருகிறோம். எங்களுக்கு ஆர்டர் கொடுங்கள்" என கேட்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+