தமிழக மக்களுக்கு குட்நியூஸ்..அப்டேட் ஆகும் அரசு கேபிள்! HD செட்டாப் பாக்ஸ் வந்தாச்சு! அதிரடி மாற்றம்
மதுரை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான எச்.டி செட் டாப் பாக்ஸ்கள் விரைவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து இதுதொடர்பாக டேக்டிவி (TACTV) சார்பில் ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டும் வரும் நிலையில் அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பிட்ட சில கேபிள் டிவி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான கேபிள் சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து கேபிள் மூலம் சேவை வழங்கப்பட்ட நிலையில், அது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு செட் ஆப் பாக்ஸ்கள் வழங்கப்படுகிறது. மேலும், அந்த செட் டார்ப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அரசு கேபிள் டிவி:
200க்கும் மேற்பட்ட சேனல்கள் 200 கட்டணத்தில் வழங்கப்படுகிறது. 140 ரூபாய் ஜிஎஸ்டி வரியுடன் சந்தா தொகை வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டாலும் சில இடங்களில் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அப்போது பிற தனியார் நிறுவனங்களில் இருந்த ஆபரேட்டர்கள் அரசு கேபிள் சேவையில் இணைந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
ஹெச்டி செட்டாப் பாக்ஸ்:
அந்த வகையில் ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்க வேண்டும் என கேபிள் டிவி ஆபரேட்டர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து உயர் தொழில்நுட்பத்துடன் அரசு கேபிள் டிவிக்கு விரைவில் எச்டி செட்டாப் பாக்ஸ்கள்வழங்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக விநியோகஸ்தர்கள் மேலாளர்கள் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள்:
அந்த வகையில், மதுரையில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் நீண்டநாள் கோரிக்கையான HD செட்டாப் பாக்ஸ்களை கேபிள்டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயலாக்கம் செய்து ஆய்வு நடைபெற்றது. அதில், புதிய எச்டி செட்டாப் பாக்ஸ்கள் ஒளிபரப்பை துவக்கி வைத்து, ஆப்ரேட்டர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மீண்டும் இணையலாம்:
தொடர்ந்து பேசிய அவர்," தமிழ்நாடு முழுவதும் மின் கம்பங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கேபிள் மட்டுமே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அரசு கேபிள் டிவியில் வெளியே சென்ற உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மீண்டும் அரசு கேபிள் டிவியில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும், அரசு கேபிள் டிவியில் தடையற்ற சிக்னல் வழங்கவும் மேலும் தடை ஏற்படும் பொழுது மாற்று ஏற்பாடாக Stand by சிக்னல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
உயர்தர சேவைகள்:
மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சிக்னல் இல்லாத பகுதிகளில் சந்தாதாரர்கள் மற்றும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் சிக்னல் இல்லாத பகுதிகளுக்கு உடனடியாக சிக்னல் வழங்கப்படும் என்றார். மேலும், Android Box மற்றும் IP TV போன்ற உயர்தர சேவைகள் விரைவில் அரசு நிறுவனத்தில் வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications