மதுரைவாசிகளுக்கு குட்நியூஸ்.. ஊருக்கு கிளம்பறீங்களா.. தமிழக அரசின் போக்குவரத்து துறை அதிரடியை பாருங்க
மதுரை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்.

இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறது. அந்த வகையில், இந்த முறையும் ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை: இந்த வார இறுதி நாளான 2ம் சனிக்கிழமை வருகிற 12ம் தேதி வருகிறது.. மறுநாள் ஞாயிற்றுக்கிழமையை 13ம் தேதி வருகிறது.. இந்த 2 நாட்களுமே விடுமுறை நாளாகும்.. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம்.. அன்றைய தினமும் அரசு விடுமுறை தினம் என்பதால், அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஒருநாள் விடுப்பு எடுக்கும்பட்சத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுப்பு கிடைத்துள்ளது.
இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி கொண்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி முடிவு செய்துள்ளனர். எனவே, பொதுமக்களின் வசதியை கருத்தில்கொண்டு, வெளியூர்களுக்கு செல்ல ஏதுவாக 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பயணிகள்: அதன்படி, பயணிகள் எந்தவித சிரமமுமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 11.08.2023 அன்று தினசரி இயக்க கூடிய பஸ்களுடன், கூடுதலாக 500 பஸ்களும், 12.08.2023 அன்று 200 பஸ்களும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 1,100 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமின்றி, 15.08.2023 செவ்வாய்க்கிழமை, சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆறுமுகம்: இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மேலாண் இயக்குநர் ஆறுமுகம், இன்னொரு குட்நியூஸ் தந்துள்ளார்.. அதன்படி, சென்னைக்கு 75 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கம் செய்யப்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் விடுத்துள்ளார். அதில் உள்ளதாவது:
"வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினவிழா தொடர் விடுமுறை வருவதை முன்னிட்டு வருகிற 11.8.2023 முதல் 15.8.2023 வரை திருச்சி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விருதுநகர்: சென்னையில் இருந்து 11 மற்றும் 12-ந் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு 85 பேருந்துகளும், வார விடுமுறை மற்றும் சுதந்திர தினவிழா முடிந்து 15.8.2023 அன்று ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 75 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கம் செய்யப்படுகிறது.
மேலும் 16.8.2023 அன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டும் மதுரை கோட்ட இயக்க பகுதிகளிலிருந்து தாணிப்பாறை சுந்தர மகாலிங்கம் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், மாசாணியம்மன் கோவில், ராமேசுவரம் கோவில் மற்றும் பிற பகுதிகளுக்கு பயணிகளின் தேவைக்கேற்றார்போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளது.
மகிழ்ச்சி: பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், பயணிகளுக்கு வழிகாட்டவும், சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications