தமிழகம் அதிகம் முன்னேறிய மாநிலம்..உங்களுக்கு முன்னுரிமை அளிப்போம்.. மதுரையில் மோடி உரை!
தமிழகம் அதிகம் முன்னேறிய மாநிலம், இதனால் தமிழகத்திற்கு இன்னும் நிறைய திட்டங்களை வழங்குவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மதுரை: தமிழகம் அதிகம் முன்னேறிய மாநிலம், இதனால் தமிழகத்திற்கு இன்னும் நிறைய திட்டங்களை வழங்குவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று பாஜக சார்பில் நடத்தப்பட்ட பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பின் அவர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார்.
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்தது தமிழகம் என்று உரையை தொடங்கிய மோடி 20 நிமிடம் பேசினார். பாஜக தேசிய செயலாளர் அவரது உரையை மொழிபெயர்த்தார்.

மீனாட்சியம்மன் கோயில்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ள பெருமை பெற்றது மதுரை. மதுரையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் கண்ட மதுரை. எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.

பெரிய தொலைநோக்கு
பெரிய தொலைநோக்கு வசதியுடன் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க திட்டம் உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒவ்வொரு மாநிலங்களிலும் எய்ம்ஸ் அமைக்கப்படும். பாஜக ஆட்சியில் 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 47 லட்சமும் கழிப்பறைகள் தமிழகத்தில் கட்டப்பட்டது.

சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது
பாஜக ஆட்சியில் 35 ஆயிரம் கிமீக்கு சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை, நீர்வழிச்சாலை, புதிய வான்வழி போக்குவரத்து.ராமேஷ்வரம் மற்றும் பாம்பனை தனுஷ்கோடியுடன் இணைக்க போகிறோம். நீண்ட கால கோரிக்கையான அதி விரைவு ரயில் சேவை தேஜஸ் இயக்கப்படும்.மதுரை-சென்னை நடுவே இந்த ரயில் இயக்கப்படும்.

முன்னேறிய மாநிலம்
தமிழகம் அதிக முன்னேறிய மாநிலம். இங்கு அதிக தொழிற்சாலைகள் அமைந்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதனால் தமிழகத்திற்கு இன்னும் நிறைய திட்டங்களை வழங்குவோம். தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்போம்.

தூத்துக்குடி சாலை
தூத்துக்குடிக்கு புதிய சாலை அமைக்கும் திட்டத்தில் இருக்கிறோம். இதனால் தமிழகத்தில் தூத்துக்குடி வேகமாக முன்னேற்றம் அடையும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தூத்துக்குடி துறைமுகம் முக்கியமானது. தூத்துக்குடி துறைமுகம் தென் இந்தியாவிலேயே முக்கிய துறைமுகமாக முன்னேற்றப்படும். இதன் மூலம் தூத்துக்குடியில் தொழில் முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தப்படும், என்று மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications