ஜனநாயகன் டிரெய்லர் பார்க்க வந்து! பராசக்தி போஸ்டரை கிழித்து! மதுரையில் விஜய் ரசிகர்கள் அராஜகம்
மதுரை: ஜனநாயகன் டிரெய்லர் வெளியிட்ட திரையரங்கில் இருந்த பராசக்தி பேனரை விஜய் ரசிகர்கள் கிழித்ததால் அங்கு பதற்றம் நிலவியது. தங்களுக்கு பிடித்தமான ஹீரோவின் படத்துடன் வேறு யாருடைய படமும் ரிலீஸாக கூடாது என்பதில் விஜய் ரசிகர்கள் உறுதியாக இருப்பதே இந்த வீடியோ காட்டுகிறது.

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படமும், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படமும் ஒரே நேரத்தில் வெளியாவதால், விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் வெளியிட்ட காணொளிகள் இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன.
நடிகர் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், பொங்கலுக்கு விஜய்யின் கடைசி படமாக சொல்லப்படும் 'ஜனநாயகன்' படத்துடன் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' மோதுவதால், விஜய் ரசிகர்கள் இந்த மோதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மதுரையில் உள்ள ரிட்சி சினிமாஸ் திரையரங்கில் நேற்று 'ஜன நாயகன்' பட டிரெய்லர் வெளியீட்டுக்காகக் காத்திருந்த விஜய் ரசிகர்கள், திரையரங்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த 'பராசக்தி' படத்தின் போஸ்டர்களைக் கிழித்தெறிந்தனர்.
இந்தக் காட்சியை அங்கிருந்த மற்ற ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியதோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினர். இது குறித்து ஒரு சிவகார்த்திகேயன் ரசிகர், "தங்கள் அபிமான நடிகருடன் ஒரு படம் மோதும் போதே இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் என்ன செய்வார்கள்?" என்று கேள்வி எழுப்பி ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
இதேபோன்ற சம்பவங்கள் 'பராசக்தி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் அரங்கேறின. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, அரங்கில் இருந்த பல ரசிகர்கள் தங்கள் செல்போன் டார்ச் லைட்டை ஒளிரவிட்டு, விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பெயரைச் சொல்லி கோஷமிட்டனர்.
சிவகார்த்திகேயன் மேடையில் பேச வந்தபோது, 'ஜனநாயகன்' படத்துடன் 'பராசக்தி' மோதுவது குறித்துப் பேசும்போதும், விஜய்யின் பெயரை அவர் உச்சரிக்கும்போதெல்லாம் ரசிகர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர். சமூக வலைத்தளங்களில் வீடியோக்களைப் பதிவிட்ட பல விஜய் ரசிகர்கள், 'இந்த பொங்கல் பண்டிகை எங்களுக்கே சொந்தம்' என்று சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சவால் விடுத்தனர்.
எச். வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள 'ஜனநாயகன்' ஜனவரி 9 அன்றும், சுதா கொங்கரா இயக்கிய 'பராசக்தி' ஜனவரி 10 அன்றும் பொங்கலுக்கு வெளியாக உள்ளன. விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' முதலில் 2025 தீபாவளிக்கு வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' ஜனவரி 14 அன்று வெளியாவதாக இருந்தது. இரண்டு படங்களின் வெளியீட்டு தேதிகளும் மாற்றப்பட்டதால், இந்த எதிர்பாராத மோதல் ஏற்பட்டது.
சமீபத்தில் நடந்த 'பராசக்தி' நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், தனது படத்தின் வெளியீட்டு தேதியை மாற்ற முயற்சி செய்ததாகவும், ஆனால் விஜய்யின் ஒப்புதலுக்குப் பிறகே திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்றும் தெரிவித்தார். இருந்தபோதிலும், இந்த விளக்கங்கள் விஜய் ரசிகர்களின் கோபத்தைப் போக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து இணையத்தில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜனநாயகன் டிரெய்லரை பார்த்த பலர் இந்த படம் தெலுங்கு படமான பகவந்த் கேசரியின் ரீமேக் என விமர்சித்து வருகிறார்கள். அதில் இருக்கும் சீன்களை உருவி சில மசாலாக்களை தடவி தமிழகத்தில் மசாலா கேசரியை கிண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.
-
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications