குழந்தைக்கும் அரசுக்கும் இடையேயான வாழ்நாள் பந்தம்! தாய்மாமன் தங்க மோதிர திட்டம்.. அருண்ராஜ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தாய்மாமன் தங்க மோதிரம் குழந்தைக்கும் அரசுக்கும் இடையேயான வாழ்நாள் பந்தம் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார். ஒவ்வொரு மோதிரத்திலும் பிரத்யேக குறியீட்டு எண் இடம் பெற்றிருக்கும் என்றும், ஜூன் 22 முதல் செப்டம்பர் 27 வரை பிறந்த 1.28 லட்சம் குழந்தைகளுக்கு108 மையங்கள் மூலம் தங்க மோதிரங்கள் வழங்கப்படுகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி எந்த ஒரு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

Thaimaman thanga mothiram thittam is lifelong bond between the child and Govt says Minister Arunraj

இன்று தமிழகம் முழுக்க ஜூன் 22 முதல் செப்டம்பர் 27 வரை பிறந்த 1.28 லட்சம் குழந்தைகளுக்கு108 மையங்கள் மூலம் தங்க மோதிரங்கள் வழங்கப்படுகின்றன. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இந்த திட்டத்தினை தொடங்கி வைக்கும் முன்பு அமைச்சர் அருண் ராஜ் பேசியதாவது:-

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் என்று திருவள்ளுவர் கூறுகிறார். தம் குழந்தையின் சிறு கைகள் அளாவிய உணவு அமிழ்தை விட இனிது என்கிறார் வள்ளுவர். இன்று அந்த பிஞ்சு கைகளில் தமிழக அரசின் உறவு, நம் முதல்வரின் அன்பு பொன்னாக மிளிர போவது தான் இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ஆகும்.

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்கு, தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில், ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் எடையுள்ள 22 கேரட் தரம் உள்ள பிஐஎஸ் முத்திரை உள்ள தங்கம் மோதிரம் தமிழக அரசின் சீராக வழங்கப்படும். இந்த தங்கத்தின் தரத்திற்கு உங்க தங்க மகன் உத்தரவாதம் கொடுக்கிறார்.

ஜூன் 22 முதல் செப்டம்பர் 27 வரை பிறந்த 1.28 லட்சம் குழந்தைகளுக்கு, 107 மையங்கள் மூலம் தங்க மோதிரங்கள் வழங்கப்படுகின்றன. இன்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு தாயும் சேயும் வீட்டிற்கு புறப்படும் போது தங்கம் மோதிரம் கொடுத்து அன்போடு வழியனுப்பப்படுவார்கள். ஒவ்வொரு மோதிரத்திலும் தனித்துவமான வரிசை எண், பாதுகாப்பு முத்திரை இட்ட சிற்பம், தாயின் ஆர்சிஎச் அடையாள பதிவு இருக்கும்.

இன்று மதுரையில் தொடங்கும் திட்டம், மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட தயாராக இருக்கிறது. துறையின் சார்பில் நான் ஒரு உறுதி அளிக்கிறேன். எந்த ஒரு குழந்தையும் விடுபடாது. எந்த ஒரு மோதிரமும் வழி தவறாது. ஒவ்வொரு தாயும் மரியாதையோடும், மகிழ்ச்சியோடும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தமிழக தாய்மார்களுக்கு ஒரு அழைப்பு, அன்பு தாய்மார்களே, உங்கள் குழந்தைகள் பிறக்க அரசு மருத்துவமனைக்கு வாங்க.. இங்கே நாட்டின் சிறந்த மகப்பேரு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அன்பான செவிலியர்கள் இருக்கிறார்கள். செலவின்றி பாதுகாப்பான பிரசவ சேவை வழங்கப்படுகிறது. இன்று முதல் உங்கள் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீரும் வழங்கப்படுகிறது. உங்கள் குழந்தை வளர்ந்து ஒரு நாள் கேட்கும் போது இந்த தமிழக அரசு மோதிரம் தந்தது என பெருமையோடு சொல்லுங்கள். அந்த மோதிரம் குழந்தைக்கு ஒரு நினைவு சின்னம். அந்த குழந்தைக்கும் இந்த அரசுக்கும் இடையே வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் இந்த பந்தம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+