செந்தில்பாலாஜியை தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனும் திமுகவிற்கு போகிறார்... செல்லூர் ராஜூ பேச்சு
மதுரை: அமமுக-வைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் தி.மு.க.வில் சேரப்போகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால், இடைத்தேர்தல் வந்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறி வருகிறார்.

வருகிற மே 23 ம் தேதிக்கு பிறகு தமிழக அரசியலின் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே, திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்து வருகிறார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரனுக்கு அருகில் இருந்து கொண்டு, அவருக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் பேசி வருகிறார் என்றார்.
டிடிவி தினகரனின் வளர்ச்சிகோ அல்லது ஆதரவாகவோ தங்க தமிழ்ச்செல்வன் பேசவில்லை என்றும், தங்கத் தமிழ்ச்செல்வனின் பேட்டிகளில் தி.மு.க.வில் சேரப் போவதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
முன்னதாக, திருப்பரங்குன்றத்தில் அதிமுக மாபெரும் வெற்றிப் பெருவதன் மூலம் திமுகவிற்கு சவுக்கடி கிடைக்கும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications