உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் எங்கள் கூட்டணி தொடரும் - ஜிகே வாசன்

    மதுரை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட விரகனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மொத்த பேரூராட்சி நகராட்சி தலைவர்கள் அரசியல் மாநாடு மாநில தலைவர் ஜிகே வாசன் தலைமையில் நடைபெற்றது.

    The alliance with ADMK will continue in Local body election also:GK Vasan

    இம்மாநாட்டில் மதுரை திருநெல்வேலி கன்னியாகுமரி சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து தலைவர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
    இம்மாநாட்டில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அவை, டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் அவர்கள் வள்ளுவர் குறளில் நீரின்றி அமையாது உலகு என்கிற வரிகளை மேற்கோள் காட்டி அதற்கு வாழ்த்து தெரிவித்து மத்திய அரசு நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும்.

    மத்திய அரசு அறிவித்துள்ள கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றும் என்று தமிழக முதல்வர் கூறியதை அடுத்து அதை தமிழக அரசு உடனடியாக துரிதமாக நிறைவேற்ற வேண்டும்.
    .
    எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் இருக்கிறது என்பதை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் இதற்கென தனியாக ஒரு துறையையும் ஒற்றைச் சாளர முறையை உருவாக்கி இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.
    தமிழகம் முழுவதும் வருங்காலங்களில் அனைத்து இடங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டாயம் செயல்படுத்த பெற வேண்டும்.

    மேலும் புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்கப்பட வேண்டும் அது முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநாட்டை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜிகே வாசன், தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தமாகா கூட்டணி தொடரும் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+