பரிசுப்பெட்டி அல்ல.. அது காலி பெருங்காய டப்பா… அமமுக சின்னம் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

உசிலம்பட்டி: டிடிவி தினகரன் தனது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு முன் தேர்தல் முடிந்துவிடும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கப்பட்டிருப்பது பரிசுப்பெட்டகம் அல்ல; அது காலி பெருங்காய டப்பா எனவும் கூறியுள்ளார்.

The AMMK’s Gift box is Empty; Minister Udhayakumar Criticism

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பிரச்சாரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக, உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் சின்னமாக வழங்கப்பட்டுள்ள பரிசு பெட்டகத்தைத் திறந்து பார்த்தால், அதில் ஒன்றும் இருக்காது என்றும், அது ஒரு காலி பெருங்காய டப்பா என்றும் கூறினார். டிடிவி தினகரனின் சின்னத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஒரு நாள் போதும் என அமமுக வேட்பாளர்கள் கூறிய நிலையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

இதற்கிடையே, தி.மு.க. ஆட்சி காலத்தில் இழந்த நமது அனைத்து உரிமைகளும் அ.தி.மு.க. ஆட்சியில் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது என்றும், தேனி அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றி டெல்லியில் எதிரொலிக்கும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+