விஷேசத்துக்கு திருமண மண்டபம்! துக்க வீட்டிற்கு ஐஸ் பாக்ஸ்! கலக்கும் உசிலம்பட்டி திமுக வேட்பாளர்!
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக பெண் வேட்பாளர் ஒருவர் விநோதமான வாக்குறுதிகளை கொடுத்து மக்களிடம் ஓட்டுக் கேட்டு வருகிறார்.
இதனால் இவரது பிரச்சாரமும், வாக்குறுதிகளும் தமிழகம் தழுவிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

உசிலம்பட்டி நகராட்சி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் சகுந்தலா. இவர் உசிலம்பட்டி நகராட்சி 11-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடுகிறார். திமுக அதிக எண்ணிக்கையில் வெற்றிபெறும் பட்சத்தில் உசிலம்பட்டி நகராட்சி தலைவராக கூட சகுந்தலா வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே தாம் போட்டியிடும் 11-வது வார்டு மக்களுக்கு திமுக வேட்பாளர் சகுந்தலா அளித்துள்ள வாக்குறுதிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விநோத வாக்குறுதிகள்
11-வது வார்டு வாக்காளர்கள் இல்லங்களில் நடைபெறும் விஷேசங்களுக்கு வி.கே.எஸ். திருமண மண்டபம் இலவசமாக வழங்கப்படும். 11-வது வார்டில் இறந்தவரின் உடலை பாதுகாப்பாக வைப்பதற்கு ஐஸ் பாக்ஸ் இலவசமாக கட்டணமின்றி வழங்கப்படும். 11-வது வார்டு மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ் எந்தவித செலவுமின்றி நகராட்சியில் பெற்றுத்தரப்படும். இதேபோல் தெருவிளக்கு, தெரு குழாய், சாலை வசதி அமைத்துக் கொடுக்கப்படும் என திமுக வேட்பாளர் சகுந்தலா தமது வார்டு மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்.

திமுக வேட்பாளர்
மாநில அரசின் திட்டங்களை கூறி ஓட்டுக்கேட்டால் எங்கள் பகுதிக்கு என்ன செய்வீர்கள், அதைச் சொல்லுங்கள் என மக்கள் பல இடங்களில் வேட்பாளர்களிடம் கறார் காட்டுவது கவனிக்கத்தக்கது. இதனால் தான் தன்னால் செய்ய முடியும் என்கிற வகையிலான இது போன்ற வாக்குறுதிகளை திமுக பெண் வேட்பாளர் சகுந்தலா கொடுத்திருக்கிறார்.

வேடிக்கை
திமுக பெண் வேட்பாளரின் வாக்குறுதிகளை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் வேடிக்கையாக இருப்பினும் கூட, அது அப்பகுதி மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. திமுக வேட்பாளர்களுக்கு போட்டியாக அமமுக வேட்பாளர்களும் உசிலம்பட்டியில் இன்னும் பல வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றனர்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!










Click it and Unblock the Notifications