அது என்ன நீல நிறத்தில்.. அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்திருக்கும் அட்டை.. ஜப்பான் மேட்.. இதான் காரணம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜு கழுத்தில் மாட்டி இருக்கும் நீல நிற அட்டை பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 17ம் தேதி குணமடைந்தார். தற்போது முழு உடல் நலத்துடன் இருக்கும் இவர் அரசு நிகழ்ச்சிகளில் கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறார்.

மிக கவனம்

மிக கவனம்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இருக்கும் இவர் மீண்டும் தனக்கு பாதிப்பு ஏற்படாத வண்னம் கவனமாக இருக்கிறார். இவர் இப்போது எங்கே சென்றாலும் இரண்டு மூன்று செட் மாஸ்க் கொண்டு செல்கிறார். சானிடைசர் வைத்து உள்ளார். அதேபோல் தான் சந்திக்கும் நபர்களையும் சானிடைசர் பயன்படுத்தும்படி கோரிக்கை வைத்து வருகிறார். கொரோனா பரவல் குறித்து அதிக கவனத்துடன் இருக்கிறார்.

என்ன அட்டை

என்ன அட்டை

இந்த நிலையில்தான் அமைச்சர் செல்லூர் ராஜு கழுத்தில் மாட்டி இருக்கும் அட்டை பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 'வைரஸ் ப்ளாக் அவுட்' என்ற இந்த அட்டையை அவர் தற்போது கழுத்தில் மாட்டி உள்ளார். நீல நிறத்தில் இருக்கும் இந்த அட்டை என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். கொரோனா பாதிப்பு தொடங்கி பின் இந்த அட்டை வைரலாக இணையத்தில் பேசப்பட்டது. ஜப்பான் தொழில் நுட்பத்தில் இந்த அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

என்ன மாதிரியான சக்தி

என்ன மாதிரியான சக்தி

இந்த அட்டைக்கு உள்ளே குளோரின் டை ஆக்ஸைடு இருக்கும். இந்த அட்டையை மாட்டினால் 1 மீட்டர் சுற்றளவில் இருக்கும் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாது என்று விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. இதில் இருக்கும் குளோரின் டை ஆக்ஸைடு நம்மை சுற்றி வரும் வைரஸை அண்ட விடாது என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 150 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இதைத்தான் மாட்டி உள்ளார்

இதைத்தான் மாட்டி உள்ளார்

இந்த அட்டையைதான் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜு மாட்டி இருக்கிறார். மீண்டும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கும் பொருட்டு அவர் இதை மாட்டி உள்ளார். ஆனால் இந்த அட்டையின் பயன் அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. முன்னதாக கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் செல்லூர் ராஜு அது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், போகிற போக்கில் கொரோனா என்னை டச் செய்து விட்டது.

பயம் இல்லை

பயம் இல்லை

வடிவேல் போல என்னை கொரோனா லைட்டாக டச் செய்துவிட்டது சென்றது . எனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தது. பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். நீங்களே பார்க்கலாம்.எனக்கு பயப்படும்படி எதுவும் பிரச்சனை இல்லை. எனக்கு ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாம் வைக்கவில்லை.மருத்துவமனை சென்றேன், நன்றாக ரெஸ்ட் எடுத்தேன். என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+